மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள். 1956 முதல் 1959 வரை

988
இலங்கையில்  மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள்

பண்டாரநாயக்கா  1956 முதல் 1959 வரை பிரதமர்.இருந்த காலத்தில்

 (S.W.R.D. Bandaranaike   Prime Minister )

சிங்கள பௌத்த பேரினவாத வெறி கொண்டவர். இவர்காலத்தில் தமிழர்கள் சிங்களவர்களுடன் வாழ்ந்த சகோதர உறவை உதாசீனம் செய்ய திட்டமிட்டு
 தமிழ்,சிங்கள இனக்கலவரங்களை உண்டாக்கி படுகொலைகள் புரிவதற்கு
ஆரம்ப தூபமிட்டவர்.
தமிழர்கள் சிங்கள வாழ்விடங்களில் இருந்து உயிருடன்  எரிக்கபட்டதும், பச்சிளம் பாலகர்கள் ஈவிரக்கம் இன்றி சுடு தார் பீப்பாக்குள் போட்டு படுகொலை செய்யப்பட்டதும்,
இந்து வணக்க தலங்களில் குருவானவர்களின் உயிரான பூணூலை அறுத்து அவர்களின் அடையாளமாக இருந்த தலைகுடுமியை வெட்டியதும்,தமிழ் பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டதுடன் அவர்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டதும் ஸ்ரீலங்கா என்ற பௌத்த பெயரை அமுல்படுத்த வேண்டும் என்றும் அதன் அடையாளத்தை நெருப்பில் காச்சி தமிழ் பெண்களின் நெஞ்சிலும் ஆண்களின் முதுகிலும் குத்தி அடையாளமிட காரணமாக இருந்தவர்.
இவர்தான் ஆங்கிலம் தமிழ் மொழிகளை புறம்தள்ளி சிங்கள தேசம் சிங்கள மக்களுக்குரியது என்றும் அதுவே ஆட்சி மொழி என்றும் 1956இல் பிரகடனப்படுத்தியவர்.
சிங்களவர்களுடன் சேர்ந்தே வாழுவோம் என்று நம்பிக்கையோடு வாழ்ந்த தமிழ் மக்கள் மனதில் சிந்திக்கவும், காயப்படுத்தியவொரு இனக்கலவரம் 1958.
அரசுக்கெதிராக தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் மேட்கொண்ட சாத்வீக அகிம்சை போராட்டங்கள் ஆயுதம் கொண்டு அடக்கப்பட்டது.
இவரின் காலத்தில் ஸ்ரீலங்கா அரசினரின் திட்டமிட்ட இனப்படுகொலை
 இங்கினியாகேல கரும்பு தொழிற்சலையில்  05.05.1956 அன்று கோவில் அர்ச்சகர் ஒருவர் உயிருடன்  எரிக்கப்பட்டதுடன் 150இற்கும் மேட்பட்ட தமிழ்  மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் இதில் சிறுவர்கள் கொதிக்கும் தாரில் போட்டு கொல்லப்பட்டனர்.
அத்துடன் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் கோடிக்கணக்கான சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளன .இதுபோன்றே 01.05.1958 அன்றும் மீண்டுமொரு படுகொலை இடம்பெற்று இதில் 300இற்கும் மேட்பட்டவர்களின் உடல்கள் கிடைக்கப்பட்டதுடன் சிலர் இனம்தெரியாத முறையில் காணாமலும் ஆக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் வாழ்வாதார இடங்களை விட்டு அகதியாக்கப்பட்டனர்.
இன்றுவரையும் தமிழர்கள் நாடிழந்து அகதியாகவே வாழ்கின்றார்கள் தமிழர்கள் வாழ்விடம் இன்னும்தான்  திரும்பவில்லை. தமிழரின் பூர்வீக நிலங்களில் சிங்கள குடியேற்றங்களும் ராணுவ அத்து மீறலமும் இன்றுவரை இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.
குறிப்பு:- இதில் தரப்படும் தமிழின படுகொலை பற்றிய விபரங்கள் முழுமையான தொகுப்பல்ல
போர்க்கால சூழலில் சில படுகொலைகள் பற்றிய விபரங்கள் தவற விடப்பட்டுள்ளன. எம்மால் அறியப்பட்ட கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தொகுப்புகள் தொகுக்கப்பட்டுள்ளது.
*நோக்கம்:- இதில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு  தமிழருக்கெதிரான படுகொலைகள் இன்றுவரையும்  இடம்பெற்று கொண்டிருக்கிறது.  இதை பார்க்கும் நீங்கள் எம்மினத்தை  காக்க உதவுங்கள்.
நன்றி.
ம. கஜன்
அனைத்துலக மனித உரிமைச்சங்கம்   பிரெஞ்சு
 00 33 1  45 98 89 49  0033 75 80 870 84
Email    aidhfrance@gmail.com