மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள். 1978 முதல் 1989 வரை

1387
இலங்கையில்  மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள்
யூனியஸ் றிச்சர்ட்  ஜெயவர்த்தனா 1978-1989 இருந்த காலத்தில்
   ( ஜே ஆர் ஜெயவர்த்தனா J. R. Jayewardene President )
இவர் மிகுந்த ராஜதந்திரியும் தமிழர் இனவிரோதியும் சிங்கள பௌத்த பேரினவாதியும் ஆவார்.
1980 இல் பெரியபுள்ளு மலை எனும் இடத்தில் இவர் நிகழ்த்திய படுகொலை சம்பவத்தில் 25 ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
தமிழர்களின் அடிப்படையே முதுகெலும்பான கல்வி . அந்த கல்விக்கு ஆதாரமாக ஆசியாவிலேயே இரண்டாம் இடத்தை பெற்றிருந்த யாழ்ப்பாணம் நூல்நிலையம் எரிக்கப்பட்டது .
1 லட்சத்துக்கு மேட்பட்ட நூல்கள் ஆவணங்கள் ஏடுகள் என்பன திட்டமிட்டு எரிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் முக்கிய நிகழ்வாகும்.இந்நிகழ்வு 1981.06.01 ம் திகதி இரவு சிங்கள வன்முறை அரசால்  இடம்பெற்றது.
இது 20ம் நூற்றாண்டின் இன நூலளிப்புகளில் மிகப்பெரும் வன்முறையாக  கருதப்படுகிறது.
இவ்வழிப்பு நடந்த காலகட்டத்தில் யாழ்ப்பாண பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக திகழ்ந்தது .
இந்த நூலக எரிப்பு சிங்கள அரசில்  இலங்கையின் அமைச்சர் காமினி திஸாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.
நூலகம் எரிக்கப்பட்டது ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி தமிழ் தேசிய போக்குக்கு உரம் ஊட்டியது.
மேலும் இக்காலப்பகுதியில் தமிழ் மக்கள் வாழும் இடங்களில் படுகொலைகளும் சிங்கள இரானுவத்தினால் நிகழ்த்தப்பட்டன.
ஜூலை 23 1983 அன்று 400 முதல் 3000 பேர் வரை தமிழ் மக்கள்  படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு .இதையே கறுப்பு ஜூலை ஆக அனுஷ்டிக்கின்றோம் .
இதில் தமிழ் மக்களின் ஆடைகள் களையப்பட்டு இராணுவத்தால் பெரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படட கொடூரமான சம்பவம் இடம்பெற்ற தினம் இதுவாகும்.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி அன்று சிங்கள இராணுவத்துடன் இணைந்து சிங்கள கும்பல் ஒன்று வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு தமிழர் வீடு வீடாக சென்று 3000 ற்கும் மேற்பட்ட தமிழ்  மக்களை கொன்று குவித்தனர்.
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள்
ஜூலை 25 1983 அன்று  35  தமிழ் கைதிகளும் ஜூலை 28 அன்று 18தமிழ் கைதிகளும் ஸ்ரீலங்கா அரசின் திடத்தின்படி  சிங்கள கைதிகளால் வெட்டியும் குத்தியும் கொல்லப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி படுகொலையானது 1983 ஜூலை 24 மற்றும் 25ம் திகதியன்று சிங்கள வான்படையினரால் 51 ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1983 இல் 3 நாட்களில் 5000 வரையான தமிழ்மக்கள் முதற்தடவையாக அதிகமானவர்களை படுகொலை செய்ய வைத்தவர்.
இதில் 25,000 பேர் காயமடைந்தனர். கோடிக்கணக்கான தமது சொத்துக்களையும் இழந்து தெற்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் வடபகுதிக்கு அடித்து விரட்டப்பட்டனர் .
சாம்பல் தோட்டம் படுகொலையானது 1984 ம் ஆண்டு இடம்பெற்றது.
இதில் 5 தமிழ் மக்கள் காட்டிற்குள் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.
சுன்னாகம் காவல்நிலைய படுகொலையானது 08.01.1984 அன்று சிங்கள அரசின் உந்துதலால் சிங்கள கும்பல் ஒன்றினால் நிகழ்த்தப்பட்டது. இதில் 19 ற்கும் மேட்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
சுன்னாகம் சந்தை பேரூந்து நிலையம் போன்ற இடங்களில் 28.03.1984 அன்று 09 தமிழ் மக்கள் சிங்கள இராணுவத்தினால் கொல்லப்பட்டனர்.
மதவாச்சி ரம்பாவா படுகொலையானது பேரூந்தில்  1984 செப்டெம்பர் மாதம் சிங்கள இராணுவத்தால் ஊர்காவற்படையினராலும் 15 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.
திக்கம் படுகொலை 1984.09.16 அன்று சிங்கள காவற்துறையினரால்  நிகழ்த்திய படுகொலைகளில் 16 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
 ஒதியமலை  படுகொலை ஆனது 1984 டிசம்பர் மாதம் 1ம் திகதி அன்று ஒதியமலை கிராமத்தில் சிங்கள இராணுவத்தால் இடம்பெற்ற படுகொலையில் 32 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
குமுழமுனை படுகொலை ஆனது இராணுவத்தினரால் 6 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இச் சம்பவம் 02.12.1984 அன்று இடம்பற்றது.
 1984 மன்னார் படுகொலைகள் 4ம் திகதி டிசம்பர் அன்று இராணுவம் 107 இற்கும் 150 இற்கும் இடைப்பட்ட தமிழ் மக்களை படுகொலை செய்யப்பட்டதுடன் விவசாயிகளும் திருச்சபையின் மதகுருக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
செட்டிகுளம் படுகொலை  1984 டிசம்பர் 2 அன்று மன்னார் வவுனியா எல்லையிலுள்ள செட்டிகுளம் கிராமத்தில் ஊரடங்கு உட்படுத்தி அங்குள்ள ஆண்களில் 52 பேரை வாகனத்தில் விசாரணைக்கு ஏற்றி சென்று வெட்டி கொலை செய்தமை.
கொக்கிளாய் தொக்குத்தொடுவாய் படுகோலியானது 15.12.1984ம் ஆண்டு 131 ற்கும் மேட்பட்ட தமிழ் மக்கள் சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்பட்ட சம்பவமாகும்.
கிளிவெட்டி படுகொலை ஆனது 01.01.1985 அன்று இலங்கை இராணுவத்தினரால் 10 தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு நிர்வாணமாக கொல்லப்பட்டுள்ளனர்.
முள்ளியவளை படுகொலை 16.01.1985 அன்று முள்ளியவளை கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் 17 பேரை இராணுவத்தினர். படுகொலை செய்தனர்.
வட்டக்கண்டல் படுகொலை ஆனது பாடசாலைகளிலும் உழவு நிலங்களிலும் இடம்பெற்ற படுகொலைகளாகும் இதில் மாணவர்கள் மற்றும் உழவர்கள்  52 பேர் கொடூரமான முறையில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.
புதுக்குடியிருப்பு படுகொலையானது அந்த கிராமத்திலுள்ள இயன் கோயிலடியில் 30 அப்பாவி மக்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் 21.04.1985 அன்று இடம்பெற்றது.
வல்வை  படுகொலை யாழ்ப்பாணம் வல்வை பிரதேசத்தை சேர்ந்த பல்வேறு இடங்களில் இலங்கை இராணுவத்தினால் செய்த படுகொலைகளில் 70 ற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் 10.05.1985 அன்று இடம்பெற்றது.
திருகோணமலை படுகொலையானது திருகோணமலை மாவட்டங்களில் பரவலாக பல்வேறு இடங்கைள நடந்த படுகொலைகளில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
03.05.1985 (50) பேர்  , 23.05.1985 (8) பேர் , 24.05.1985 (9) பேர் , 27.05.1985 (7)பேர் , 03.06.1985 (13) பேர் என சிங்கள இராணுவத்தால் ஊர்காவற்படையினராலும்  நிகழ்த்தப்பட்டன.
வல்வெட்டித்துறை,நெல்லியடி சந்தை மீதான தாக்குதல்.
1985 வல்வெட்டித்துறை படுகொலைகள் அல்லது வாழ்வை நூலக படுகொலைகள் என்பது 1985 மே 12ம் நாள் யாழ்ப்பாண மாவட்டம் வல்வெட்டித்துறை நூலகத்தில் சுமார் 70 தமிழ்ப் பொதுமக்கள் இலங்கை படையினரால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும் .
இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட பொதுமக்கள் நகர நூலகத்துக்குள் செல்லுமாறு பணிக்கப்பட்டனர் . அதன் பின்னர் நூலகம் ராணுவத்தினரால் குண்டு வைத்து தகர்த்தப்பட்டது .
இச்சம்பவத்தில் நூலகத்தில் இருந்த அணைத்து பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.
 நெடுந்தீவு குமுதினி படகு படுகொலை 
நெடுந்தீவு குமுதினி படகு படுகொலை
1985ம் ஆண்டு மே 15ம் திகதி நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினி படகில் பயணம் செய்தவர்கள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழி மறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் உட்பட மொத்தம் 36 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர் 30இற்கும் மேட்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாத்தப்பட்டனர் .
நேரில் கண்டவர்களின் சாட்சி படி இலங்கை கடற்படையை சேர்ந்த 6 பேர் படகில் ஏறினார் . படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வொருவரையும் தமது பெயர் வயது முகவரி எங்கு செல்கிறார்கள் போன்ற விபரங்களை உரத்துகூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டி கொன்றனர் . இதில் பல பச்சிளம் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
கிளிவெட்டி படுகொலையில் அப்பாவி தமிழ் மக்கள்  02.06.1985 அன்று  13 பேரும் , 03.06.1985 அன்று 53 பேரும் , 14.06.1985 அன்று 150 பேரும் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
திரியாய் படுகொலையானது அகதிகளாக உள்நாட்டிலேயே குடிபெயர்ந்த தமிழ் மக்களில் 10 பேரை இலங்கை இராணுவம்  கொலை செய்த சம்பவம் 14.08.1985 அன்று இடம்பெற்றது.
சாம்பல் தீவு படுகொலையானது தொடர்ச்சியாக 04.08.1985 இலிருந்து 09.08.1985 வரையான நாட்களில் இடம்பெற்ற படுகொலைகள் ஆகும் இதில் 383 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
வயலூர் படுகொலைகள் யாவும் 24.08.1985 அன்று காட்டுப்பகுதிக்குள் சிங்கள இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் ஆகும் இதில் 50 தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் இதில் ஒருவர் இராணுவத்தினரால் வாயில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
நிலாவெளி படுகொலையானது நிலாவெளி அகதி முகாமில் 16.09.1985 அன்று 30 ற்கும் மேட்பட்ட பொதுமக்கள் இராணுவத்தினராலும் ஊர்காவற்படையினராலும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பிரமந்தனாறு படுகொலைகள். 1985.10.02 அன்று சிங்கள இராணுவத்தினற்றால் 11 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.  இதில் சில தலைகீழாக தொங்கவிடப்பட்டு அடித்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் மூக்கில் நீரை ஊற்றி மூச்சடைக்கச்செய்து கொல்லப்பட்டனர்.
கந்தளாய் படுகொலைகள் 09.11.1985 அன்று சிங்கள இராணுவத்தினரால் 6 தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்டனர். இவர்களின் பிரேத பரிசோதனையில் இரு பெண்கள் கொல்லப்படுவதற்கு முன் பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது.
மூதூர் கடற்கரைசேனை படுகொலை ஆனது 1985 டிசம்பர் மாதம் 8,9,10,11 போன்ற திகதிகளில் பல்வேறு இடங்களில் சிங்கள முப்படைகளாலும் 30 ற்கும் மேட்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வங்காலை  தேவாலயத்தில்வைத்து 06.01.1986 அன்று 9 தமிழ்மக்கள் சிங்களராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்டனர்.
கிளிநொச்சித்தொடருந்துநிலையத்தில் 25.01.1986 அன்று சிங்களராணுவத்தினரால் 12 தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர்.ராணுவத்தினர்  மறைந்திருந்து மக்கள்மீது தாக்கினர்.
உடும்பன்குளத்தில் உழவுநிலத்தில் 19.02.1986 அன்று 130 தமிழ்மக்கள் சிங்களராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்டனர்.இறந்தவர்களின் உடல்களின்மீது ராணுவத்தினர் வைக்கோலை தூவி தீ வைத்தனர்.
ஈட்டிமுறிச்சானில் பல்வேறுஇடங்களில் 19 மற்றும் 20.03.1986 ஆகிய நாட்களில் சிங்களவான்படை,சிங்களராணுவம் மற்றும் சிங்களக்கைதிகளால் 20 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் .
பெரியபுல்லுமலையில் உள்ள வீட்டில் 08.05.1986 அன்று சிங்களராணுவத்தினரால் 18 தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.ராணுவத்தினர் பூட்ஸ் காலால் ஏறி சென்றதால் மூன்று மாத குழந்தை உட்பட அனேக குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
பல்வேறுஇடங்களில் 10.11.1986 அன்று இனவெறிபிடித்த சிங்களராணுவத்தினரால் 24 தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.
ஆனந்தபுரத்தில் 04.06.1986 அன்று சிங்களராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர்.
கந்தளாய்  பேரூந்தில் 04,05,06.1986 அன்று சிங்களவான்படை மற்றும் சிங்களஊர்காவல்படையினரால் 50க்கு மேல் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.எரிந்து போன பேருந்தின் சாம்பலிலிருந்து 10 பேரின் உடல்கள் எடுக்கப்பட்டன.
மண்டைதீவு கடலில் 10.06.1986 அன்று சிங்களகடற்படையினரால் 33 தமிழ் மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.சில மீனவர்களின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டன மேலும் சிலரின் வயிற்றுப்பகுதி கிழிக்கப்பட்டது.
செருவிலில் அகதிகளுக்கு உணவு அனுப்பும் வேலையின்போது 12.06.1986 அன்று  சிங்கள ஊர்ப்படையினரால் 21 தமிழ் மக்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.
தம்பலகாமத்தில் பல்வேறுஇடங்களில் 12.11.1985 அன்று 9 பேரும் 26.11.1985 அன்று 8 பேரும் 25.05.1986 அன்று 6 பேரும் 30.05.1986 அன்று 4 பேரும் 20.06.1986 அன்று 34 பேரும் சிங்கள வான்படை மற்றும் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.சிலர் கடைகளுக்குள் தீ வைத்து கொளுத்தப்பட்டனர்.
பரந்தனில் விவசாயிகள் 7 பேர் பல்வேறு இடங்களில் 28.06.1986 அன்று சிங்களராணுவம் மற்றும் சிங்களவான் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கழிவுநீர் வாய்க்கால்களில் வீசப்பட்டன.
பெருவெளி அகதிகள் முகாமில் 15.07.1986 அன்று  சிங்களராணுவம் மற்றும் ஊர்காவல் படையினரால்  48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.கழிவுநீர் தொட்டிகளில் கொல்லப்பட்ட உடல்கள் திணிக்கப்பட்டிருந்தன மேலும் திரவத்தை கொண்டு முகங்கள் அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்டிருந்தன.
தண்டுவான் பேரூந்துநிலையத்தில் 17.07.1986 அன்று 17 தமிழ் மக்கள் சிங்களராணுவம் மற்றும் வான்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
மூதூர் மணல்சேனையில் பல்வேறு இடங்களில் 18.07.1986 அன்று சிங்களராணுவத்தால் 14 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.
அடம்பனில் பல்வேறுஇடங்களில் 12.10.1986 அன்று சிங்களமுப்படைகளாலும் 20 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பெரியபண்டிவிரிச்சானிலுள்ள உழவுநிலம் ஒன்றில் 15.10.1986 அன்று 2 தமிழர்கள் சிங்களராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர் மார்பகங்களையும் பிறப்புறுப்பையும் வெட்டி சித்திரவதை செய்யப்பட்டு ஒரு பெண் கொல்லப்பட்டார்.
கொக்கட்டிச்சோலை இறால்பண்ணையில் 28.01.1987 அன்று 133 தமிழர்கள் சிங்களசிறப்பு ராணுவப்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.14 முதல் 40 வயதானவர்கள் கடத்தில் கொல்லப்பட்டனர்.
பட்டித்திடலில் உள்ள வீடொன்றில் இறைவழிபாட்டின் போது 26.04.1987 அன்று 17 தமிழர்கள் சிங்களராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.ஒரு பெண் குழந்தை உணவருந்தும்போது தலையில் குண்டு காயம்பட்டு இறந்து போனாள்.
தோணிதட்டமடு கிராமத்தில் 27.05.1987 அன்று 13 தமிழ்மக்கள் சிங்களராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.மக்கள் உறங்கிக்கொண்டிருக்கும்போது படுகொலை செய்யப்பட்டனர்.
ஆலவாய் கோவிலில் 29.05.1987 அன்று 40 தமிழ் மக்கள்  சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.ராணுவத்தின் ஆணையின் படி கோவிலில் தஞ்சமடைந்த மக்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன.
மூளாய் மருத்துவமனையில் 05.11.1987 அன்று 5 தமிழ் மக்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.
புனித யாகப்பர் கோவில் தாக்குதல்
கொக்கட்டிசோலை கிராமத்தில் இடம்பெற்ற மிகப்பெரும் தமிழின படுகொலை
தமிழ் மக்கள் சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இனஅழிப்பிலிருந்து உயிர் பாதுகாப்பிக்காக இளைஞர் யுவதிகளை மேட்கொண்ட ஆயுத எதிர் போராட்டத்தை குழுக்களின் எதிர்புரட்சியாகவும் பயங்கரவாத பிரச்சனையாகவும் சர்வதேசத்திட்கு சித்தரித்து தமிழீழ மக்களையும் அவர்களின் போராட்டத்தலைமைகளையும் இந்திய வல்லாதிக்கத்திட்கு எதிராக திருப்பி முரண்பட வைத்தவர் இந்த ஜெயவர்த்தனா .
இவரின் இராயத்தந்திரம் அன்றைய அரசியல் முதிர்வற்ற அன்றைய பிரதமர் ரஜீவகாந்தியை தமிழ் மக்களுடன்  முரண்பட வைத்தவர் .
அதனால் 1லட்சம் இந்திய இராணுவத்தினர் அமைதிப்படை என்ற பெயரில் தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்தனர்.
பெரும் படுகொலைகளும் கற்பழிப்புக்களும் கைதுகளும் சித்திரவதைகளும் இவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இவை அனைத்துக்கும் காரண கர்த்தாவாக விளங்கியவர் ஜெயவர்த்தனா அவர்களே.
குறிப்பு:- இதில் தரப்படும் தமிழின படுகொலை பற்றிய விபரங்கள் முழுமையான தொகுப்பல்ல
போர்க்கால சூழலில் சில படுகொலைகள் பற்றிய விபரங்கள் தவற விடப்பட்டுள்ளன. எம்மால் அறியப்பட்ட கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தொகுப்புகள் தொகுக்கப்பட்டுள்ளது.)
நோக்கம்:- இதில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு  தமிழருக்கெதிரான படுகொலைகள் இன்றுவரையும் இடம்பெற்று கொண்டிருக்கிறது.  இதை பார்க்கும் நீங்கள் எம்மினத்தை  காக்க உதவுங்கள்.
நன்றி.
ம. கஜன்
அனைத்துலக மனித உரிமைச்சங்கம்   பிரெஞ்சு
 00 33 1  45 98 89 49  0033 75 80 870 84
Email    aidhfrance@gmail.com