மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள். 1989 முதல் 1993 வரை

3625
மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள். 1989 முதல் 1993 வரை
ரணசிங்க பிரேமதாசா 1989 முதல் 1993 காலப்பகுதி
(Ranasinghe Premadasa  President)
இவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தனா அவர்களின் தமிழின விரோத போக்கை தொடர்ந்து மேற்கொண்டவர். இவர்காலத்தில் இந்திய இராணுவம் வடக்கு கிழக்கிலிருந்து தமிழ் மக்களை கொன்று குவிக்க காரணமாய் இருந்தவர்.அதேநேரத்தில் வடக்கு கிழக்கில் இலங்கை ஊர்காவற் படையினை வைத்து சிங்கள குடியேற்றங்களை தமிழர் பிரதேசங்களில் குடியேற்றியவர்.
தமிழர்களை சொந்த நிலங்களில் இருந்து அகதியாகியவர்.
மேலும் பல தமிழர்கள் கடத்தப்பட்டு படுகொலைகள் செய்யப்பட்டதும் இவர்காலத்தில்.
நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட
மேலும் சில  படுகொலைகள்.
* சத்துருக்கொண்டான் படுகொலை
* நெத்ப்பிட்டி முனை படுகொலை
* வந்தாறு முனை படுகொலை
* ஒட்டுசுட்டான் படுகொலை
* புல்லுமலை  படுகொலை
* புதுக்குடியிருப்பு சந்தை மீதான விமான குண்டு தாக்குதல்
* உருத்திரபுரம் படுகொலை
* வங்காலை படுகொலை
* வட்டக்கச்சி படுகொலை
* வந்தாறுமூலை படுகொலை
படுகொலைகள் யாவும் இவர்காலத்தில் நிகழ்ந்துள்ளது. மேலும்
கிண்ணியடி படுகொலை
வற்றாப்பளை அம்மன் கோவில் எறிகணை வீச்சு
தெல்லிப்பளை கோயில் மீதான தாக்குதல்
கிழக்கு பல்கலைக்கழக படுகொலைகள் என்பது  சொந்தஇடங்களில் இருந்து வெளியேறி பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த  226 ற்கும் மேற்பட்ட மக்கள் 1990.05 மாதம் 23, 24 திகதிகளில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.
சம்மாந்துறை படுகொலை 10.06.1990 அன்று சிங்கள இராணுவத்தினரால் சம்மாந்துறை பிரதேச மக்கள் 37 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
வீரமுனை படுகொலையானது 20.06.1990 மற்றும் 15.08.1990 ஆகிய தினங்களில் சிங்கள இராணுவத்தினரால் 233 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவமாகும்.
சித்தாண்டி படுகொலை 1990ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம்,27ம் திகதிகளில் சிங்கள இராணுவத்தினரால் நிகழ்த்திய படுகொலையில் 137 அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பரந்தன் சந்தை படுகொலை ஆனது 24.07.1990 அன்று சிங்கள இராணுவத்தால் பரந்தன் கிராமத்தில் வசித்த அப்பாவி தமிழ் மக்கள் 15 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமாகும்.
பொத்துவில் படுகொலை காவல் நிலையத்தில் வைத்து 30.07.1990 அன்று சிங்கள இராணுவத்தினரால் 125 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
திராய்க்கேணி படுகொலை 06.08.1990 ம் நாள் சிங்கள இராணுவத்தாலும் சிங்கள சிறப்பு படையினராலும் திராய்க்கேணி கிராமத்தில் வாழ்ந்த மக்களுள் 90 ற்கும் மேற்பட்டோரை படுகொலை செய்தனர். இதில் ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு பின் நெருப்பினில் வீசப்பட்டார்.
கல்முனை படுகொலை 11.08.1990 அன்று கல்முனை இராணுவ முகாமில் சிங்கள இராணுவத்தினாலும் சிங்கள சிறப்புப்படையினாலும் 62 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பெண்கள் பல பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொல்லப்பட்டனர்.
துறைநீலாவணை படுகொலை பல்வேறு இடங்களில் 12.06.1990 அன்று 60 தமிழ் மக்கள் சிங்கள இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் புரிந்த அட்டுழியங்கள்!!!

1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது.


ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை. வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.

ஏறாவூர் மருத்துவமனை படுகொலை ஆனது 12.08.1990 அன்று 10 அப்பாவி மக்கள் மருத்துவமனையில் வைத்து சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் .
கோரவெளி படுகொலை பல்வேறு இடங்களில் 14.08.1990 ம் நாள் சிங்கள இராணுவத்தால் 15 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
சேனகன் படுகொலை 26.08.1990 அன்று சிங்கள இராணுவத்தினரால் 4 தமிழ் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
நெல்லியடி சந்தை படுகொலையானது சிங்கள இராணுவத்தால் 29.08.1990 அன்று நெல்லியடி சந்தையில் வைத்து 16 தமிழ் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சத்துருக்கொண்டான் படுகொலை என்பது 09.09.1990 ம் நாள் பல்வேறு இடங்களில் சிங்கள இராணுவத்தினால் 205 ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும் . இதில் ஆண்கள் பெண்கள் வேறுபாடின்றி ஆடைகள் களையப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் சில பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
நட்பிட்டிமுனை படுகொலை 10.09.1990 ம் ஆண்டு சிங்கள இராணுவம் மற்றும் சிங்கள ஊர்காவற்படையினராலும்  23 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
வந்தாறு மூலை படுகொலை 1990.09.05 மற்றும் 23ம் திகதிகளில் சிங்கள இராணுவத்தினரால் பொது மக்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு  174 ற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் பெண்கள் சிறுவர்களும் அடங்குவர்.
ஒட்டுசுட்டான் படுகொலை 27.11.1990 பல்வேறு தமிழ் மக்கள் வாழும் இடங்களில் சிங்கள வான்படையினரால் நிகழ்த்திய படுகொலைகளில் 12 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு சந்திப்படுகொலை 30.01.1991 அன்று சிங்கள வான்படையினரால் 28 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண் குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க பதுங்கு குழியில் குதித்ததில் குழந்தை வெளிவந்து பின் அவர் உடல் ஊனமுற்றார்.
உருத்திரபுரம் படுகொலை 1991.02.17 அன்று சிங்கள வான்படையினரால் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் இந்த நிகழ்வு ஒரு இறுதி ஊர்வலத்தில் குண்டுகள் வீசப்பட்டதால் நிகழ்ந்தது.
வங்காலை படுகொலை தள்ளாடி இராணுவ முகாமில் 17.02.1991 அன்று சிங்கள இராணுவத்தினரால் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
வட்டக்கச்சி படுகொலை 28.02.1991 அன்று சிங்கள வான்படையினரால் நிகழ்த்திய தாக்குதலில் 09 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
வந்தாறு மூலை படுகொலை 09.06.1991 ம் நாள் சிங்கள இராணுவத்தால் தெருவில் பயணித்த 10 தமிழ் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
கொக்கட்டிச்சோலை படுகொலை ஆனது 12.06.1991 அன்று 220ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்கள வான்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். இதில் மக்கள் தலைகளை வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட ஒரு தாய் தனது குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த நிலையிலையே கொலை செய்யப்பட்டார் .  மேலும் ஒரு குழந்தையை  காலில் பிடித்து சுவற்றில்  அடித்து  கொலைசெய்தனர்.
கிண்ணியடி படுகொலை 12.07.1991 அன்று சிங்கள இராணுவத்தினரால் 13 அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்
கரப்போழை முத்துக்கல் படுகொலை
1991 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தினரால் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
வற்றாப்பளை படுகொலை
18.05.1992 அன்று பொங்கல் விழாவின்போது சிங்கள வான்படையின் தாக்குதலில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
தெல்லிப்பளை கோவில் படுகொலை
30.05.1992 அன்று சிங்கள வான்படையின் தாக்குதலில் 10 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
மயிலந்தனை படுகொலை
09.08.1992 அன்று பல்வேறு இடங்களில் சிங்கள இராணுவத்தினரால் 50 அப்பாவித்தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
கிளாலி கடல் நீரேரி படுகொலைகள்
02.01.1993 அன்று 35 பொதுமக்களும்  29.07.1993 அன்று 17 பொதுமக்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டனர்.
இந்த கொடூரமான படுகொலைகள் யாவும் ரணசிங்க பிரேமதாசா அவர்களின் தலைமையில் இலங்கை இராணுவத்தினால் நிகழ்த்தப்பட்டன. இந்த படுகொலைகள் யாவிட்கும் ரணசிங்க பிரேமதாசா அவர்களே பொறுப்பாளி ஆவார்..
*குறிப்பு:- இதில் தரப்படும் தமிழின படுகொலை பற்றிய விபரங்கள் முழுமையான தொகுப்பல்ல
போர்க்கால சூழலில் சில படுகொலைகள் பற்றிய விபரங்கள் தவற விடப்பட்டுள்ளன. எம்மால் அறியப்பட்ட கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தொகுப்புகள் தொகுக்கப்பட்டுள்ளது.
*நோக்கம்:- இதில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு  தமிழருக்கெதிரான படுகொலைகள் இன்றுவரையும் இடம்பெற்று கொண்டிருக்கிறது.  இதை பார்க்கும் நீங்கள் எம்மினத்தை  காக்க உதவுங்கள்.
நன்றி.
ம. கஜன்
அனைத்துலக மனித உரிமைச்சங்கம்   பிரெஞ்சு
 00 33 1  45 98 89 49  0033 75 80 870 84
Email    aidhfrance@gmail.com