மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள். 1994 முதல் 2005 வரை

2074
மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள்.
சந்திரிக்கா குமாரதுங்கா 1994-2005  வரை
( Chandrika Kumaratunga  President)
இவர் சிங்கள பௌத்த பேரினவாதியும் தனது ஆட்சிக்காலத்தில் முழு இலங்கைத்தீவில் சிங்கள ஆட்சிமொழியே இருக்க வேண்டும் என்ற இனவெறி பிடித்த டி.பண்டாரநாயக்காவினதும் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மகள் ஆவார்.
இவரின் கணவர் ஒரு திரைப்பட நடிகர் தமிழ் சிங்கள மக்கள் இனப்பிரச்சினையில் ஆர்வம் காட்டியவர். அதனால் சிங்கள பேரினவாதத்தாலே சுட்டுக்கொல்லப்பட்டவர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சந்திரிக்கா சனாதிபதியானவர். தனது காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணுவேன் என்று தேர்தல் வாக்குறுதியளித்து தமிழ் மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்றவர். இவர்காலத்தில் பல்வேறு இனவழிப்பு இடம்பெற்றது.
அவையாவன:
தமிழின அழிப்பு.
450 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றையும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட நவாலி சென் பீட்டர்ஸ் புனித தேவாலயம் மீதான தாக்குதல். நவாலி தேவாலய தாக்குதலானது 1995 ஜூலை 09 இல் யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானர் தேவாலயம் (சென் பீட்டர்ஸ்) மீது இலங்கை விமான படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குள் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 150 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
அன்றையதினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக அகதிகளாக வெளியேறிய மக்கள் நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயத்திலும் நவாலி சின்னக்கதிர்காமம்
முருகன் கோயிலிலும் தாக்கம் தீர்ப்பதட்காக அமர்ந்து இளைப்பாறினர். அவ்வேளையில் யாழ் நகர பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த புக்காரா விமானம் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மேட்படி இரு ஆலயங்கள் மீதும் வீசியது . இரண்டும் மாலை 5.45 மணியளவில் இடம்பற்ற தாக்குதலில் பலத்த சேதமடைந்தன.
இத்தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் உட்பட 65 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். சுமார் 150 இற்கும் மேட்பட்டோர் காயமடைந்தனர்.
நாகர்கோவில் பாடசாலை மீதான விமான குண்டுத்தாக்குதல். நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலையானது 1995 செப்டெம்பர் 22ம் திகதி யாழ்ப்பாணம் நாகர்கோவில் மத்திய பாடசாலையில் இலங்கை விமான படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்தனர்.
இலங்கை அரசு இந்த குற்றச்சாட்டை மறுத்தது. தாக்குதல் நடைபெற்ற காலத்தில் இலங்கையில்  ஊடக தணிக்கை நடைமுறையில் இருந்ததாக  ஊடகவியலாளரும் மனித உரிமைகள் அமைப்புகளும் தெரிவித்தன.
அன்று பகல் 12.30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக்கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமான படைகளின் “புக்காரா” விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கி கொண்டனர். இந்த பரவலான தாக்குதலால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல் சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின் போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக இஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவர் வரை அடங்குகின்றனர்.
செம்மணி  புதைகுழிகள்
செம்மணி புதைகுழிகள்  1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் காணமல்போனோரில் 400 இற்கும் அதிகமானோர் அடித்தும் சுட்டும் கொலைசெய்யப்பட்டு செம்மணி வெளியில் புதைக்கப்பட்டனர் இதை 07 சிங்கள இராணுவத்தினர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். 1995/1996 காலப்பகுதியில் யாழ்மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணமால் போயினர் அதில் கணிசமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற நிலைப்பாட்டை செம்மணி புதைகுழிகளே தோற்றுவித்தன ஏனெனில் அப்படி காணமல் போனோரில் பலர் இங்கே சடலங்களாக தோண்டி எடுக்கப்பட்டனர் அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் கைக்கடிகாரங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டார்கள் இதில் குறிப்பாக 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தையே உலுக்கிப்போட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி 14 இராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு மண்வெட்டியால் அடித்து கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதும் இங்கேதான் நடந்தது கிருஷாந்தியோடு அவரது தாயாரும் அவர்களுடைய உறவினர் சிலரும் இராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது,
இந்த விபரங்களை நீதிமன்ற விசாரணைகளின்போது சரணடைந்த இராணுவ சிப்பாய் ஒருவன் வாக்குமூலமாக பதிவு செய்திருந்தமை குறிப்பிடவேண்டிய விடயம். செம்மணி பகுதியில் தோண்டப்படாத நிலையில் இன்னும் பலரின் சடலங்கள் இருக்கக்கூடும் என கருதப்படுகிறது ஏனெனில் அந்த இடத்தில அமைந்திருக்கும் காவலரண்களில் சேவையிலிருந்த இராணுவத்தினர் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டிருந்தனர் அப்படி இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்னர் அங்கு சேவையாற்றிய இராணுவத்தினர் பொதுமக்களை கொன்று வெவ்வேறு இடங்களில் புதைத்திருக்க வலுவான ஏதுவான வாய்ப்புகள் இருந்தமை கண்டறியப்பட்டது ஆயினும் அரசின் தலையீட்டில் செம்மணி விவகாரம் முடக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.
கிளிநொச்சி நகர படுகொலைகள்
1996-1998 ஆண்டு காலப்பகுதியில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் சடலங்களும், பல மனித மண்டையோடுகளும் கழிவு நீர் தொட்டிகளிலிருந்தும் கிணறுகளிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டன.
குமரபுரம் படுகொலை
11.02.1996 அன்று குமரபுரம் கிராமத்தில் சிங்கள இராணுவத்தினரால் 26 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் இதில் 16 வயது பெண் ஒருத்தி இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு உடல் முழுவதும் நாகக்கீறல்களாலும் பற்களினாலும் கடித்த காயங்களினாலும் அவதிப்படுவதை காண சகிக்காது அவளை சுட்டுக்கொன்றதாக சிங்கள இராணுவ வீரன் ஒருவன் விசாரணையின்போது தெரிவித்தான்.
புல்மோட்டை படுகொலைகள்.
குமாரபுரம் படுகொலைகள்  திருகோணமலை படுகொலைகள் / கிளிவெட்டி படுகொலைகள்
1996 பிப்ரவரி 11 அன்று இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள குமாரபுரம் என்ற கிராமத்தில் இலங்கை இராணுவம் மற்றும் துணைப்படைகளால் மேட்கொள்ளப்பட்ட துன்பியல் நிகழ்வாகும். இதன்மூலம் 9 பெண்கள் , 12 வயதிட்குட்பட்ட 9 பிள்ளைகள் உட்பட 24 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 26 பேர் படுமோசமாக காயமடைந்தனர்.
1995 ஏப்ரல் மாதம் ஈழப்போர் மீண்டும் தொடங்கியதை அடுத்து இடம்பற்ற மிக மோசமான தமிழ் மக்கள் படுகொலை இதுவாகும் .இப்படுகொலைகள் தொடர்பாக இலங்கை அரசு இலங்கை இராணுவ
ஊர்காவல் படையினர் பலரை கைது செய்து 2004 ஆம் ஆண்டில் விசாரணைகளை ஆரம்பித்து 2016 ஜூலை 27 இல் குற்றம்சாட்டப்பட்டிருந்த 6 இராணுவத்தினரையும் நீதிமன்றம் நிரபராதிகள் எனது தீர்ப்பளித்து விடுதலை செய்தது.
தம்பிராய் சந்தை படுகொலை
17.05.1996 அன்று தம்பிராய் சந்தைமீதான சிங்கள வான்படையின் தாக்குதலில் 07 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
மல்லாவி படுகொலை 24.07.1996 அன்று மல்லாவியின் பல்வேறு இடங்களில் சிங்கள வான்படையின் குண்டுத்தாக்குதலில் 09 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
வவுனிக்குளம் படுகொலை 26.09.1996 அன்று சிங்கள வான்படையின் தாக்குதலில் வவுனிக்குளத்தின் பல்வேறு பகுதிகளில் 04 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
கோணாவில் படுகொலை 27.09.1996 அன்று சிங்கள வான்படையின் தாக்குதலில் வீதியால் சென்றுகொண்டிருந்த 05 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலை 13.05.1997 அன்று சிங்கள வான்படையின் முள்ளிவாய்க்கால் கடற்கரை மீதான தாக்குதலில் 09 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
மாங்குளம் படுகொலை 08.06.1997 அன்று சிங்கள இராணுவத்தின் தாக்குதலில் வீதியோரம் நின்றிருந்த 07 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.
அக்கராயன் மருத்துவமனை படுகொலைகள் 15.07.1997 அன்று சிங்கள வான் படையின் அக்கராயன் மருத்துவமனை மீதான குண்டுத்தாக்குதலில் 03 பேர் கொல்லப்பட்டனர்,
15.08.1997 அன்று சிங்கள வான்படையின் தாக்குதலில் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த 15 அப்பாவித்தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
பழைய வட்டக்கச்சி படுகொலை 26.03.1997 அன்று சிங்கள வான்படையின் தாக்குதலில் பழைய வட்டக்கச்சியை சேர்ந்த 06 பேர் கொல்லப்பட்டனர்.
தம்பலகாமம் படுகொலை 01.02.1998 அன்று தம்பலகாமம் கிராமத்தில் புகுந்த சிங்கள இராணுவத்தினர் 08 அப்பாவிகளை படுகொலை செய்ததோடு கொலை செய்யப்பட்ட ஒருவரின் பிறப்புறுப்பை அறுத்து அவரது வாயில் திணித்து வைத்தனர்.
சுதந்திரபுரம் படுகொலை 10.06.1998 அன்று சுதந்திரபுரம் கிராமத்தின் மீதான சிங்கள வான்படையின் தாக்குதலில் 33 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
விசுவமடு படுகொலை 25.11.1998 அன்று விசுவமடு மீதான சிங்கள இராணுவத்தின் மீதான ஏவுகணை தாக்குதலில் உணவ்ருந்திக்கொண்டிருந்த குழந்தை ஒன்று அதே இடத்தில் உடல் சிதறி பலியானது அத்தோடு அன்று 06 பேர் கொல்லப்பட்டனர்.
சுண்டிக்குளம் படுகொலை 02.12.1998 அன்று சுண்டிக்குளம் அகதிகள் குடியிருப்பு மீதான சிங்கள இராணுவத்தின் தாக்குதலில் 07 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
பாலி நகர் படுகொலை. 03.09.1999 அன்று சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் பாலி நகரை சேர்ந்த 25 பேர் கொல்லப்பட்ட்டனர்.
புதுக்குடியிருப்பு குண்டுவீச்சு 15.09.1999 முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் விமானப்படை வீசிய குண்டினால் 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர் . 50 பேர் காயமடைந்து அங்கவீனர்கள் ஆக்கப்பட்டனர்.
பாலி நகர் படுகொலை 03.11.1999 அன்று சிங்கள வான்படையின் தாக்குதலில் பாலி நகரை சேர்ந்த 06 பேர் கொல்லப்பட்ட்டனர்.
மடு தேவாலய படுகொலை 20.11.1999 அன்று
மடு தேவாலய படுகொலை 20.11.1999 அன்று மடு மாதா தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி தமிழ் பொதுமக்கள் சிங்கள இராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டார்கள் இந்த துயர சம்பவத்தில் தாயொருவர் தன்னுடைய 04 குழந்தைகளை பறிகொடுத்த வேதனையான சம்பவம் நடந்தது. இதில் 44 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பள்ளிக்குடா குண்டுவீச்சு 2000 மே 12ம் நாள் கிளிநொச்சி மாவட்டம் பள்ளிக்குடாவில் விமானப்படையின் குண்டுவீச்சில் படுகொலை செய்யப்பட்டனர் தமிழ் மக்கள்.
சிலாவத்துறை படுகொலைகள் 2000ஆம் ஆண்டு மன்னார்  மாவட்டம் சிலாவத்துறையில் கடற்படை தாக்குதலில் பொதுமக்கள் பலர்  படுகொலை செய்யப்பட்டனர்.
கொழும்புத்துறை  படுகொலைகள் 2000 மே 13 யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பிரதேசத்தில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் சிலர் படுகொலை செய்யப்பட்டனர்.
பிந்துனுவெல படுகொலை 25.11.2000 அன்று பிந்துனுவெல எனும் இடத்தில் அமைந்திருந்த மறுவாழ்வு மையம் மீதான் சிங்கள வான்படையின் திட்டமிட்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
மிருசுவில் படுகொலைகள். யாழ்ப்பாணம் சாவச்சேரி மிருசுவில் கிராமத்தில் 2000 ஆம் ஆண்டு டிசெம்பர் 20 ம் நாள் குழந்தைகள் உட்பட 9 தமிழ் அகதிகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு.
தமது வீடுகளை விட்டு வெளியேறிய 9 பொதுமக்கள் தமது வீடுகளை சென்று பார்ப்பதற்காக யாழ்ப்பாண  நகரில் இருந்து 16 மைல்கல் தொலைவிலுள்ள மிருசுவிலுக்கு சென்றபோது 2000 டிசம்பர் 19 இல் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இலங்கை இராணுவத்தால் டிசம்பர் 20 இல் படுகொலை செய்து புதைக்கப்பட்டார்கள்.
மிருசுவிலில் இருந்து உடுப்பிட்டிக்கு இடம்பெயர்ந்த சில அகதிகள் தமது வீடுகளையும் உடமைகளையும் பார்ப்பதற்காகவும் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி வரவும் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்று டிசம்பர் 19ம் நாள் மிருசுவிலுக்கு சென்றவேளை அரைகுறையாக புதையுண்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலத்தை கண்டுள்ளனர். அவர்களுள் சிலர் தமது குடும்பத்தவர்களுடன் இத்தகவலை பகிர்ந்துகொண்டுமிருந்தனர். அடுத்தநாள் அதேபகுதிக்குச் சென்று குறித்த சடலத்தை அடையாளங் காண முற்பட்ட வேளை அங்கு நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்திடம் அகப்பட்டுக்கொண்டார்கள்.
இவர்களுள் 8 பேர் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியிலுள்ள பொதுமக்களொருவரது வீட்டு மலசலகூட குழியினுள் வீசப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பொன்னுத்துரை மகேஸ்வரன் என்பவர் பலத்த காயங்களுடன் இத்தாக்குதலில் இருந்து தப்பி வந்து தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததை அடுத்தே இக்கொலைகள் பற்றிய விபரங்கள் தெரிய வந்தன . அவர் வழங்கிய தகவலிலேயே படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மலசல கூட குழியிலிருந்து பின்னர் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது.
இப்படுகொலை தொடர்பான விசாரணைகளின்போது சர்ச்சைக்குரிய பெண்ணின் சடலம் பற்றியும் சாவகச்சேரி நீதிமன்றில் சாட்சிகள் வாக்கு மூலமளித்திருந்தனர் . எனினும் நீதிபதி முன்னிலையில் தேடுதல்கள் நடத்தப்பட்டிருந்த போதும் பின்னர் அரைகுறையாக புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.காரணம் அவ்விடம் எங்கும் அச்சடலம் இல்லை இராணுவத்தினரால் இடம் மாற்றப்பட்டிருக்கிறது.
மாவட்ட வைத்திய அதிகாரி மரு.சி.கதிரவேற்பிள்ளையின் சாட்சின்படி  கொலைசெய்யப்பட்டவர்களின் கழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளன
கொல்லப்பட்டவர்களில் மூவர் இச்சிறுவர்களாவர் அதில் 5 வயது சிறுவன் வில்வராசா பிரசாத் உம் ஒருவராவார். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 5 வயதிற்கும் 41 வயதிற்கும் இடைப்பட்டவர்கள். இதனை அடுத்து நடந்த விசாரணைகளை அடுத்து 5 இராணுவத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத கைது சித்திரவதை படுகொலை மற்றும் புதைகுழிகளில் புதைத்தமை உட்பட 17 குற்றசாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன.
ஐயாத்துரை நடேசன்  31  . 05  . 2004   ஸ்ரீலங்காப் புலனாய்வாரள்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்
ஐயாத்துரை நடேசன் இலங்கையின் முன்னோடி தமிழ் ஊடகவியலாளர் ஆவார். இவர் 2004 .05. 31 அன்று மட்டக்களப்பு நகரில் வேலைக்கு செல்லும்;  வழியில் ஸ்ரீலங்காப் புலனாய்வாரள்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்ஜ
யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த இவர் நெல்லை நடேசன் என்ற பெயரில் எழுதிவந்தார்.  இறக்கும் போது இவர் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் துணைத்தலைவராக பணியாற்றினார்.
மேலும் இவர் சக்தி தொலைக்காட்சியின் மட்டக்களப்பு நிருபராகவும்இ வீரகேசரி நாளேட்டின் எழுத்தாளராகவும்இ ஐ.பி.சி. நிறுவனத்துக்கான இலங்கை நிருபராகவும் பணியாற்றி வந்தார்
தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம்  ஊடகவியலாளர்
தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் ஆகஸ்ட் 11,1959 பிறந்த இவர் –  இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும்  தமிழ்நெட்டின்  பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார்.
ஏப்ரல் 28, 2005)  கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற  (வான்) ஒன்றில் வந்த ஸ்ரீலங்கா புலனாய்வாரள்களால் கடத்தப்பட்ட இவர் தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்
சிவராம் 1989 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் யோகரஞ்சனி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொண்ட சிவராமிற்கு வைஸ்ணவி, வைதேகி என்ற இரு மகள்களும் சேரலாதன் என்ற மகனும் உள்ளனர்.
ஆரம்பக்கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் கற்றார். அதைத் தொடர்ந்து கொழும்பில் அக்குவானாஸ் கல்லூரியில் தொடர்ந்தார். பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர் பேராதனைப் பல்கலைகழகத்தில்அனுமதிபெற்றார். செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற அவர், ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர், அரசியல் ஈடுபாட்டினாலும், 1983 இல் இடம்பெற்ற இனக்கலவரங்களினாலும் பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டார்.
சிவராம் அவர்கள் தராகி என்ற புனைபெயரில் ஆங்கிலத்தில் கொழும்பில் இருந்து வெளிவரும் the island  ஏட்டில் தமது முதலாவது கட்டுரையை 1989-இல் எழுதினார். அரசியல், போரியல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக அவரது கட்டுரைகள் அமைந்திருந்தன. உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் அவரது கட்டுரைகள் பெயர்பெற்றிருந்தன.
இப்பிடியான கொடூரமான படுகொலைகளை இந்த சந்திரிக்கா குமாரதுங்காவே  செய்துமுடித்தார் 
அன்று இவரது தந்தை பண்டாரநாயக்கா  செய்த படுகொலைகளின் தொடர்ச்சியினை இவரது அம்மா சிறிமாவோ பண்டாரநாயக்கா செய்தார் 
அவர்கள்  இருவரையும் தொடர்ந்து சந்திரிக்கா குமாரதுங்கா செய்துள்ளார். அதுமட்டுமல்லாது இன்றுவரையும்  மறைமுகமாக தமிழின அழிப்புக்கு இவர் காரணமாகவே இருக்கிறார்.
குறிப்பு:- இதில் தரப்படும் தமிழின படுகொலை பற்றிய விபரங்கள் முழுமையான தொகுப்பல்ல
போர்க்கால சூழலில் சில படுகொலைகள் பற்றிய விபரங்கள் தவற விடப்பட்டுள்ளன. எம்மால் அறியப்பட்ட கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தொகுப்புகள் தொகுக்கப்பட்டுள்ளது.
நோக்கம்:- இதில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு  தமிழருக்கெதிரான படுகொலைகள் இன்றுவரையும் இடம்பெற்று கொண்டிருக்கிறது.  இதை பார்க்கும் நீங்கள் எம்மினத்தை  காக்க உதவுங்கள்.
நன்றி.
ம. கஜன்
அனைத்துலக மனித உரிமைச்சங்கம் பிரெஞ்சு
00 33 1 45 98 89 49 0033 75 80 870 84
Email aidhfrance@gmail.com