சுவிஸ் சூரிச்சின் பரபரப்பான பகுதியில் தமிழினப்படுகொலை புகைபடங்கள் பலரின் மனச்சாட்சியை உறுத்துகின்றது-கஜன்

717

சுவிஸ் சூரிச் பகுதியில் மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜனால் முன்னெடுக்கப்படும் ஈழத்துக்காக இதயத்தை திறவுங்கள் என்ற தொனிப்பொருளின் கீழ் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழினப்படுகொலை சாட்சியப்புகைப்படங்களை பரபரப்பு நிறைந்த உலகத்தின் முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றான இடத்தில் பலரும் பார்த்து திகைத்து நிற்கின்றனர்.

கடந்த 2013ம் ஆண்டு தொடக்கம் சர்வதேசத்தின் பார்வைக்கு சர்வதேச நீதிக்காக வைக்கப்பட்டு வருகின்றது.இன்றுவரை பிரான்ஸ் மற்றும் சுவிசின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஈழத்தின் அவலத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் உலகின் பல்வேறு மொழி பேசும் மக்கள் உலவும் இடங்களில் அமைதியாக தனக்கென சர்வதேச நீதி கேட்டு நிற்கின்றது.

ஐக்கிய நாடுகள் இன்னமும் ஏமாற்றி வருவதாகவும் பக்கசார்பாக நடந்து வருவதாகவும் இனப்படுகொலையாளிகளுக்கு துணைபோவதாகவும் இதை ஏற்பாடு செய்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் கஜனின் தளதளத்த குரல் இந்தப்புகைப்படங்களின் பின்னணியில் ஒலிக்கின்றது.நேற்று ஐநாவின் மனித உரிமைப்பேரவையில் பாதிக்கபட்ட ஈழத்தமிழ் மக்களின் குரல்களை மதிக்காமல் சிறீலங்கா அரசுக்கு சார்பாக கால அவகாசத்தை வழங்கி ஈழத்தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான நீதியை தாமதப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் போக்கு கவலைக்குரியதும் துரோகத்தனமானதும்.

2009ம் ஆண்டும் ஈழ மக்கள் போகவேண்டாம் என மன்றாட மன்றாட அங்கிருந்து வெளியேறிய ஐநா அமைப்புக்கள் பின் தமிழ் மக்கள் இலட்சமாய் கொல்லப்பட கண்ணை மூடிக்கொண்டிருந்தது.இன்றும்அதே போல இனப்படுகொலையாளிகள் தப்புவதற்கு வழி செய்து தருவதுபோல நடந்து கொள்கின்றது.இவ்வாறான ஐநாவின் மனநிலை மாறுமா இல்லையெனில் ஈழத்தமிழருக்கு இழைத்த அநீதிக்காக என்றோ ஒரு நாள் கவலைப்படவேண்டிய நிலை உருவாகும் எனவும் மேலும் கஜன் தெரிவித்தார்.