ஐநாவில் மூடிய அறையில் சுமந்திரனோடு கஜேந்திரகுமார் லீலாதேவி நடத்திய பேச்சுவார்த்தை அம்பலமானது-ஆதாரத்துடன் வெளியிட்டார்.

189

2009ல் ஐநா எங்கள் மக்கள் மன்றாட மன்றாட ஈழத்தைவிட்டு வெளியேறியது அன்று ஐநா சபை கைவிட்டதால் எமது மக்கள் இலட்சமாய் கொல்லப்பட்டனர்.சொத்துக்கள் இழந்தனர்.ஊனமுற்றனர்.காணாமல் ஆக்கச்செய்யப்பட்டனர்.தற்பொழுது ஐநாவின் மனித உரிமைப்பேரவை கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.இதற்கு தாயகத்தில் இருந்து எம்பி சுமந்திரன் சிறீதரன் உட்பட வந்திருந்தனர்.பல அமைப்புக்களும் வந்திருந்தனர்.ஆனால் இதே சுமந்திரன் சிறீதரன் ஆகியோரை கடந்த 2015ல் கேட்டுக்கொண்டோம் கால அவகாசம் கொடுக்காமல் சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தும்படி ஆனால் அன்று எங்கள் குரல்களை கேட்காமல் சிறீலங்காவிற்கு ஒத்துழைத்து கால அவகாசத்தை பெற்றுக்கொண்டு இன்று ஐநாவில் எமக்கு இந்த நிலை ஏற்படக்காரணமாயிருந்தனர்.இன்;றும் கூட ஐநா வின் மனித உரிமை கூட்டம் முடிவுறும் தருணத்தில் கடைசி வாரத்தில் வந்து தாமும் ஐநா வந்தோம் என்று மக்களை ஏமாற்றவே தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் சிறீதரன் ஆகியோர் இம்முறை வந்திருந்தனர்.
தாயகத்தில் அரசுக்கு கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்துவிட்டு நேற்றுவரை அரசோடு கூடிக்குலவியிருந்தவர்களை இங்கு ஐநா வந்து ஒரு மூடிய அறையில் தொலைபேசிகளை அணைத்துவிட்டு என்ன கதைத்தோம் என்பதை மக்களுக்கு தெரியாமல் மறைத்து நடத்திய சதி நாடகத்தை ஆதாரத்துடன் அம்பலமாக்குகிறோம் எங்கள் மக்கள் நலன்கருதி.

ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடருக்கு வந்தவர்கள் என்ன செய்தார்கள்
ஐநா மனித உரிமை பேரவை கூட்டத் தொடருக்கு முதல்வாரத்தில் சிலரும் இரண்டாம் வாரத்தில் சிலரும் அறிக்கை வெளியிடப்பட இருக்கின்ற கடைசி சில நாட்களிலும் என தாயகத்தில் இருந்தும் புலம்பெயர்ந்த நிலத்தில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதிகள் என வந்தார்கள்.நிலத்தில் இருந்து வந்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் சிறீதரன் இவர்கள் யார் இதுவரை ஐநாவால் வழங்கப்பட்டது கால அவகாசம் இல்லை அது கண்காணிப்பு என மக்களின் கருத்துக்களுக்கு மாறாக கருத்துக்களை வெளியிட்டது மட்டுமல்ல அரசோடு கூட்டுச்சேர்ந்திருப்பவர்கள்.2015ல் கால அவகாசம் வழங்கக் காரணமானவர்கள்.இவர்கள் ஐநாவுக்கு ரணிலின் நிகழச்சி நிரலின் அடிப்படையில் வந்தார்கள்.சிறீசேனவின் நிகழ்ச்சி நிரலில் வடக்கு ஆளுனர் உட்பட்ட நபர்கள்.

பாதிக்கப்பட்ட நபர்கள் தரப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரிநிதியாக திருமதி லீலாதேவி மரபு உரிமை இயக்க பிரதிநிதி வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் உள்ளிட்டவர்கள்.நாடுகடந்த அரசுப்பிரதிநிதிகள் தமிழர் இயக்கப்பிரதிநிதிகள் மற்றும் கிருபாகரன் சுரேந்திரன் பாதிரி இம்மானுவேல் இவர்களில் பாதிரி இம்மானுவேல் சுரேந்திரன் கிருபாகரன் போன்றோம் சென்றமுறை அரசாங்கத்து கால அவகாசம் பெற்றுக்கொடுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட குழுவில் இடம்பெற்று கூட்டறிக்கை விட்டவர்கள்.பாதிரி இம்மானுவேல் இன்னுமொருபடி மேல் போய் நாட்டில் ஜனாதிபதி சிறீசேனாவின் விருந்தாளியானார்.

விடுதலைப்புலிகள் காலப்பேச்சுவார்த்தைக்காக வெளிநாடுகளுக்கு அழைத்துச்செல்லப்பட்ட புலிகளை சிறீலங்கா அரசும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களும் கையாண்டது.அதற்காக மது மாது பணம் உள்ளிட்ட விடயங்களை வழங்க தயராக இருந்தது.அவ்வாறு வெளிநாட்டுப்பேச்சுவார்த்தைக்கு சென்ற பின் தடுமாறியவர்தான் கருணா.பின்நோக்கி சிந்தித்து பாருங்கள் அன்ரன் பாலசிங்கம் நகைச்சுவையாக ஒரு மேடையில் சொன்னார் தாய்லாந்துக்கு பேச்சுவார்த்தைக்கு சென்றபோது தம்பிகள் சிலபேரை காணவில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றோம்.

இதே பாணியில் இம்முறை சிறீலங்கா அரசும் சர்வதேச முகவர் அமைப்புக்களும் சேர்ந்து ஒரு வலையை விரித்தது.அதாவது நாட்டில் அரச பங்காளிகளாக இருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளான சுமந்திரன் சிறீதரனையும் நாட்டில் அரசுக்கு எதிராக தீவிரமாக செயற்படுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் கால அவகாசம் வேண்டாம் ஓஎம்பி வேண்டாம் என பெரிய போராட்டங்களை செய்து வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் பிரதிநிதியான திருமதி லீலாவதியையும் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்போடும் ரணிலோடும் கூட்டு வைத்துள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும் யாருக்கும் தெரியாமல் ஐநாவில் ஒரு மூடிய அறையில் சந்திக்கவைப்பது.அந்தச்செய்தி வெளியில் போகாதபடி சந்திக்கவைப்பதே அந்த வலைவீச்சு.

இவ்வாறு தாயகத்தில் கீரியும் பாம்புமாக இருக்கின்றவர்களை ஒரு அறையில் சந்திக்க வைப்பபதன் மூலம் சிறிலங்கா அரசின் முகவர்களும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களும் அடைய நினைத்ததும் அறிய விளைந்ததுமான செய்திகள் உண்டு.முதலாவது சுமந்திரன் சிறீதரன் கஜேந்திரகுமார் போன்றவர்களை மூடி அறையில் சந்திக்கவைத்து அரசு சார்பு சுமந்திரன் சிறீதரன் போன்வர்களை காப்பாற்றுவது அடுத்தது கஜேந்திரகுமாரை மக்கள் மத்தியில் பலவீனப்படுத்துவதே இங்கு கவலை என்னவெனில் கஜேந்திரகுமார் அரச முகவர்களின் சதி வலையில் வீழ்த்தப்பட்டார்.

ஐநாவின் ஒரு அறைக்குள் மிகக்கச்சிதமாக அனைவரும் ஒரு அரசு முகவர் தற்பொழுது தமிழ் ஊடகமொன்றில் கூலிக்கு மாரடிக்கும் நபரின் மூலம் கொண்டுவரப்பட்டனர்.அனைவரின் தொலைபேசிகளை அணைக்கும்படியும் புகைப்படங்கள் எடுக்கக்கூடாது எனவும் இங்கு கதைக்கப்படுகின்ற எந்த விடயமும் தாயகத்தில் போராடும் மக்களுக்கோ புலம்பெயர் மக்களுக்கோ தெரியக்கூடாது எனவும் கதைக்கப்படுகின்ற விடயங்கள் அனைத்தும் இந்த அறையோடேயே மறந்துவிடவேண்டும் என அந்த அரசமுகவரான ஊடகக்கைக்கூலி கட்டளையிட அனைவரும் பெட்டிப்பாம்பாய் கட்டுப்பட்டு மிகச்கச்சிதமாக ஒவ்வொருவரும் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது கச்சிதமாக கருத்தறிதல் என்ற போர்வையில் கேட்கப்பட்டு வெளிநாட்டு புலனாய்வு முகவர்களுக்கும் சிறீலங்கா அரசு சார்பாக வந்திருந்த பிரதிநிதிகளுக்கும் கடத்தப்பட்டன செய்திகள்.ஆனால் ஊடகங்களில் தப்பிக்கொள்வதற்காக ஐநாவில் தமிழர் சார்பு அமைப்புகளை ஒன்றாக இணைக்கும் முயற்சிஎன செய்தி கசியவிடப்பட்டது.உண்மை அதுவல்ல.நீங்கள் பின்பு அவதானித்திருந்தால் தெரிந்திருக்கும் ஐநா அறிக்கை வெளியிட்ட பின் சிறீதரன் கஜேந்திரகுமார் சிவாஜிலிங்கம் நாடுகடந்து அரசு மரபு உரிமை இயக்கம் உள்ளிட்டவைகள் ஒன்றாக இருத்தி ஊடகச்சந்திப்பு ஒன்று அரங்கேற்றப்பட்டதை இது அரச முகவர்களான சுமந்திரன் சிறீதரன் ஆகியோரை காப்பாற்றவும் கஜேந்திரகுமார் சிவாஜிலிங்கம் போன்றோரை பலவீனப்படுத்தவும் திட்டமிட்ட மூடிய அறையில் பின்னப்பட்ட சதியின் ஒரு அங்கம் மூடிய அறையில் என்ன பேசினார்கள் என்பதை இதுவரை அங்கு சுமந்திரன் சிறீதரனோடு ஒரு அறையில் சங்கமித்தவர்கள் மக்களுக்கு இதுவரை வெளிப்படுத்தவில்லை.

குறிப்பாக எமது மக்கள் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று உண்டு தாயகத்தில் சம்மந்தன் விக்னேஸ்வரன் கஜேந்திரகுமார் என தமிழ் தேசியத்தை சர்வதேச புலனாய்வு அமைப்புக்களும் ரணில் சார் அமைப்புக்களும் பிரித்தாள்வதில் அக்கறையாக இருக்கின்ற அதே வேளை ஐநாவுக்கு தமிழர் சார்பாக பேசவந்த தாயகத்தில் பிரித்தாளப்படுகின்றவர்களை தங்கள் நலன் கருதி ஒரு மூடிய அறையில் மக்களுக்குத் தெரியாமல் இருத்திய சதியை பார்த்தீர்களா.இதுவே சமாதான காலத்தில் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்ட விடுதலைப்புலிகளையும் வலையில் வீழ்த்தி நடத்திய சதியும்.அது இன்னமும் நடந்தேறுகின்றது.மூடிய அறையில் நடந்த சகல உரையாடல்களும் எம்மிடம் ஆதாரத்துடன் உண்டு.தாயகத்தில் ஒற்றுமைப்படாதவர்களை ஒரு ஊடககைக்கூலி மூலம் வெளிநாட்டு முகவர் அமைப்புக்கள் மிககச்சிதமாக நடத்தி முடித்திருக்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரநிதிகள் போராடும் மக்களின் கோசங்களுக்கும் குரல்களுக்கும் எதிராக வெளிநாட்டு முகவர் அமைப்புக்கள் மூலம் கையாளப்படும் விடயங்களும் மிக விரைவில் வெளியிடப்படும்.

தமிழ்த் தேசியத்துக்கா ஒற்றுமைப்படுவது நிகழவேண்டிய இடம் தாயகம்.தாயகத்தில் யாரும் ஒற்றுமைப்பட்டால் மக்கள் கோபிக்க மாட்டார்கள்.மக்களுக்கு தெரியாமல் ஐநாவில் தொலைபேசிகளை அணைத்துவிட்டு சிறீதரன் சுமந்திரன் இம்மானுவேல் நாடுகடந்த அரசு லீலாவதி சுரேந்திரன் கிருபாகரன் சிவாஜலிங்கம் போன்றவர்கள் ஒற்றுமைப்படவேண்டிய அவசியம் இல்லை.ஒற்றுமைப்பட வேண்டிய இடமான தாயகத்தில் ஒற்றுமைப்படாமல் எவனோ ஒரு புலனாய்வு அமைப்பின் நலனுக்காக ஐநாவில் மூடிய அறையில் சங்கமித்தவர்களை எவ்வாறு அழைக்கலாம்.