ஈழத்தமிழர் விடயத்தில் ஐநா சபை பாரபட்சமாக நடக்கின்றது-மனித உரிமை செயற்பாட்டாளர் கஜன் குற்றச்சாட்டு

718

உலக மக்களின் நீதிக்காக பாரபட்சமின்ற நடக்கவேண்டிய ஐநா சபை ஈழத்தமிழர்கள் விடயத்தில் பாரபட்சமாக நடக்கின்றது என மனித உரிமைச்செயற்பாட்டாளரும் ஈழத்தமிழினத்துக்காக இதயத்தை திறவுங்கள் தொனிப்பொருளின் கீழ் உலக நாடுகளில் தமிழினப்படுகொலை சாட்சியப்புகைப்படங்களை பார்வைக்கு வைத்து நீதி கோரிவருபவருமான கஜன் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்

2009ல் ஐக்கிய நாடுகள் சபை கண்ணை மூடிக்கொண்டு இருந்ததால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் சிங்கள் இனவாத படைகளால் கொன்றொழிக்கப்பட்டனர்.அதன் பிறகு அந்த விடயத்தை ஐநா நீதி தருமென்று தமிழர்கள் நீதி கோரி இனப்படுகொலைக்கு ஒரு சர்வதேச விசாரணை கோரியபோது அதையும் பொருட்படுத்தாமல் 2015ல் உள்ளக விசாரணை என்ற போர்வையில் ஈழத்தமிழர்களின் நீதியை கால இழுத்தடிப்புச்செய்துள்ளது.தற்பொழுது 2019லும் நிலத்திலும் புலத்திலும் ஈழத்தமிழர்கள் பாதிக்கபட்ட தமிழர்கள் சிறீலங்கா கால அவகாசம் கொடுக்கவேண்டாம் எனவும் ஒரு சர்வதேச விசாரணை நடத்தவேண்டுமெனவும் கோரியபோது வல்லரசுகளின் கைப்பொம்மையாகி பாரபட்சமாக நடந்துள்ள ஐநாவின் இந்த பாரபட்ச செயலை சமுக வலைத்தளங்கள் செய்திகள் பாரிய பரப்புரையாக்க வேண்டும் காரணம் ஐநா என்பது உலகின் சகல மக்களுக்கும் சம நீதி தருவதற்காக கொண்டு வரப்பட்ட அமைப்பு ஐநா சாசனமும் அதையே கூறுகின்றது.ஐநாவின் வல்லரசுகளின் கைப்பொம்மைகளாக மாறும் அதிகாரிகளை நம்பாவிட்டாலும் எழுதப்பட்டுள்ள ஐநா சாசனத்தை நம்பிப்போராடுவோம் என்றோ ஒருநாள் எங்களுக்காக நீதி திரும்பும் என மேலும் கஜன் தெரிவித்தார்.