இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட மகளின் தந்தை ஒருவரின் உருக்கம்

735

இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட மகளின் தந்தை ஒருவரின் உருக்கம்
முல்லைத்தீவிலிருந்து கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிப் போரில் இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வரும்போது தனது மகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தந்தை  ஒருவர் தனது இருதய சத்திர சிகிச்சைக்காக பண உதவியை உருக்கமாக கோரியுள்ளார்.
வவுனியா தாலிக்குளம் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான கந்தையா சிவகுமாரன் வயது 55 மூன்று பிள்ளைகளின் தந்தை கூலித் தொழில் மேற்கொள்ளும்போது இரு தடவைகள் மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதன்போது அவருக்கு இருதயப்பகுதியில் 8 அடைப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ் அடைப்புக்களை அவசரமாக சத்திரசிகிச்சை மேற்கொண்டு அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அரச வைத்தியசாலையில் இதனை மேற்கொள்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் தனியார் வைத்தியசாலையில் உடனடியாக மேற்கொள்ளவேண்டியுள்ளது. இதற்கு எட்டு இலட்சம் ரூபா செலவு ஏற்பட்டுள்ளது கூலித் தொழிலாளியாக பணியாற்றும் குறித்த நபரிடம் அடிப்படை வசதிகள் காணப்படவில்லை. எனவே இதனை அவசரமாக மேற்கொள்வதற்கு நன்கொடையாளர்கள் பண உதவி புரிய முன்வருபவர்கள் கொமர்சல் வங்கி கணக்கு இலக்கமான 8000587095  என்ற இலக்கத்திற்கும் 0768101526 என்ற தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவருக்கு உதவி புரிய தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.