லாச்சப்பல் பகுதியில் வைக்கப்பட்ட தமிழினப்படுகொலை சாட்சியங்கள்

524

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உலகமெல்லாம் வாழும் தமிழுணர்வாளர்களால் பேரெழுச்சியுடன்அனுட்டிக்கப்பட்டது.பிரான்சிலும் லாச்சப்பல் பகுதியில் புலம்பெயர் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்த நிலையில் அப்பகுதியில் தமிழினப்படுகொலை சாட்சிய நிழங்படங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டன.
2013ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மனித உரிமைச் செயற்பாட்டாளர் கஜனால் ஏற்பாடு செய்யப்பட்டு வைக்கப்பட்டு வரும் இந்த தமிழினப் படுகொலை நிழற்படங்கள் மூலம் உலக மக்களின் மனச்சாட்சியை உறுத்தி தமிழினத்துக்கு நீதி கோருவதே இதன் நோக்கமாகும் அந்த வகையில் லாச்சப்பல் பகுதியிலும் பெருமளவானவர்கள் நிழற்படங்களை பார்வையிட்டுச் சென்றனர்.