பிரான்ஸ் பாரிசின் பல்வேறு முக்கிய இடங்களில் தமிழினப்படுகொலை நிழற்படங்கள் பார்வைக்கு

602

பிரான்ஸ் அனைத்துலக மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜனால் செயற்படுத்தப்படும் சிறீலங்கா பேரினவாத அரசாங்கங்களின் தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி பார்வைக்கு வைக்கப்படும் தமிழினப் படுகொலை சாட்சிய நிழற்படங்கள் தொடர்ந்தும் பிரான்சின் பாரிசின் முக்கிய நகரசபைகள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வைக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 70 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் மீது சிறீலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தமிழினப்படுகொலை சாட்சியங்கள் ஆவணப்படுத்தப்பட்டு அவற்றுக்கான வரலாற்று விளக்கங்களுடன் பிற நாட்டு மக்களுக்கு விளங்கும் வகையில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பார்வைக்கு வைக்கப்படுவதுடன் பிற நாட்டு மொழிகளை கற்றுள்ள புலம்பெயர் ஈழத்தின் பிள்ளைகள் தமிழினப்படுகொலை தொடர்பான விளக்கங்களை பார்வைக்கு வைக்கப்படும் இடங்களில் வேற்று மொழிகளில் விளங்கப்படுத்தியும் வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.