ஆளில்லா புதுமை விவசாயம் : அறுவடைக்கு ரோபோக்கள் – ஜப்பானின் சாதனை!

551

ஜப்பானை சேர்ந்த யூச்சி மோரி என்பவர் காய்கறிகளையும், பழங்களையும் மண்ணில் வளர்க்கவில்லை. அதற்கு மாறாக அவர் மனித சிறுநீரகத்துக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பொலித்தீன் உரைகளை மாத்திரமே பயன்படுத்துகிறார்.

இந்த விவசாய முறையை மேற்கொள்வதற்கு மண்ணை பயன்படுத்தும் அவசியமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலித்தீன் பைகளின் மீது வளரும் தாவரங்களுக்கு தண்ணீரையும், பிற கனிம சத்துக்களையும் சேர்த்துக் கொள்ள இந்த முறை வசதியாக இருக்கின்றது.

பாரம்பரிய விவசாய முறையைக் காட்டிலும் இந்த தொழில் நுட்பத்தில் 90 சதவீதம் குறைவான நீரே தேவைப்படுகின்றது. அந்த பொலித்தீன் உறை வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை தடுக்கும் என்று அந்த முறையை கண்டறிந்த ஆய்வாளரான யூச்சி மோரி தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் பணியாட்களுக்கான வெற்றிடங்களும், விவசாய நிலங்களுக்கான பற்றாக்குறையும் இருப்பதால் அவர்கள் இந்த மாதிரியான புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு அதனை ஈடுகட்டுகின்றனர்.

டயாலிஸிஸ் முறையில் ரத்தத்தை வடிகட்ட பயன்படுத்தப்படும் பொலித்தீன் உரையையே தான் பயன்படுத்திக் கொண்டதாக என யூச்சி மோரி ஊடக நேர்காணலொன்றில் தெரிவித்தார்.

ஜப்பான் மனிதர்

அவரின் நிறுவனமான மிபியோல், இந்த தொழில்நுட்பத்தின் உரிமையை கொண்டுள்ளது. இந்த நிறுவனம் 120 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள விவசாய நிலங்கள் தற்போது தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

எதிர்காலத்தில் பயிர்களைப் பாதுகாக்கவும், பேணவும் துல்லியமான வழிமுறைகளை கண்டுபிடிப்பதே விவசாய தொழில்நுட்பத்தின் முக்கிய பங்காகும்.

யூச்சி மோரி கண்டுபிடித்துள்ள இந்த தொழில்நுட்பம், ஜப்பானில் 150 இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் பயன்படுத்தப்படுகின்றது.

மண்ணில் இல்லாமல் பயிர் செய்யப்படும் தக்காளி

இந்த விவசாய முறை, சுனாமியால் தேங்கிய பொருட்கள் மற்றும் பெரிய நில அதிர்வு மற்றும் அணு உலை விபத்தால் வெளியாகும் கதிர்வீச்சு இவற்றால் மண் வளம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானின் வட கிழக்கு பகுதிகளில் பெரிதும் உதவியாக உள்ளது.

எதிர்வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் மக்கள் தொகை 7.7 பில்லியனிலிருந்து 9.8 பில்லியனாகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், உணவுப் பொருட்களை தயாரிக்கும் வர்த்தக வாய்ப்புகளுக்கு சர்வதேச அளவில் தேவையேற்படும் சாத்தியமுள்ளது.

அத்துடன் பல்வேறு இயந்திரங்களின் தேவையும் அதிகரிக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.