ஒரு முறைதான் விதைக்கப்போகின்றோம் பலகாலத்திற்கான அறுவடையை செய்ய ஏதுவாக இருப்போம்.’’

899

ஒரு முறைதான் விதைக்கப்போகின்றோம் பலகாலத்திற்கான அறுவடையை செய்ய ஏதுவாக இருப்போம்.’’

சிங்கள பேரினவாத அரசின் தொடர் தமிழின அழிப்பும், அதனை தொடாந்தும் சர்வதேசத்திற்கும்,  எடுத்துரைக்கும் mask (மாஸ்க்) முகக்கவச மனிதநேயப்போராட்டமும்

உலகின் மிலேச்சத்தனப் போக்கை  சுட்டிக்காட்டதோன்றிய கொன்வாட் 19 ( கொரோனா வைரசு) நோயால் இதுவரை பலலட்சம் மக்கள் உலகெங்கும் குறுகிய காலத்தில் உயிரிழந்துள்ளனர். அத்தோடு கோடிக்கணக்கான பொருண்மிய வீழ்ச்சிகள், மனிதமனங்களில் நம்பிக்கையீனங்கள் பல்வேறு வல்லரசுப் பனிப்போருக்கான சூழலை ஏற்படுத்தி நிற்கின்ற வேளையில், இலங்கைத்திவில் பௌத்த சிங்களப்பேரினவாதம்  தொடர்ந்தும் தமிழ்மக்கள் மீதுதான தனது இனவழிப்பைச் செய்துகொண்டுதான் வருகின்றது.

தமிழ்மக்களை புறந்தள்ளியும் மனிதநேய உதவிகளைச் செய்ய மறுத்தும் தமிழர் குடியிருப்புக்களில் நோய் தொற்றுக்கானவர்களளைதனிமைப்படுத்தல் என்ற பெயரில் கபட முயற்சிகளையும் செய்து வருகின்றது.

அத்தோடில்லாமல் இளைஞர், யுவதிகளை தற்கொலைக்கு தூண்டுதல், வாள்வெட்டுக்கலாசாரம், களவு கற்பழிப்புக்களை  ஊக்குவித்தும், தமிழினப் படுகொலைக்குற்றம் புரிந்து நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனைக்கு தீர்க்கப்பட்ட இராணுவ கைதிகளை விடுதலை செய்தும், சர்வதேசத்தால் கொலைக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட இராணுவத்தினர், கடற்படையினருக்கு  பதவியுயர்வு வழங்கியும் அடாவடி செய்து வருகின்றது.

சர்வதேசத்தின் தலையீட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று பகிரங்க அறிக்கைகளைவிட்டும் வருகின்றது. இதற்கு துணைபோகின்ற வகையில் தமிழ்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்பேசாதவர்களாக சிங்கள ஆட்சியாளருக்கு துணைபோயும் வருகின்றனர்.

  வீரமும், தீரமும், உன்னத தியாகமும் நிறைந்த – தமிழினத்திற்கு உலகில் முகவரி தந்த – ஆயுதப்போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றது.

   கடந்த 8 ஆண்டுகளாக ஆண்டுக்கு 3 தடவைகள் தமிழினவழிப்பு நிழற்படக் கண்காட்சிகளை ஜெனீவா ஐ.நா மனிதவுரிமைகள் செயலகத்திற்கு முன்பாக பல்வேறு தடைகள், அழுத்தங்கள், காலநிலை உபாதைகள்  சிங்களத்தின் அச்சுறுத்தல்களுக்குமிடையே எமது மனிதவுரிமைகள் அமைப்பானது நடாத்திக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.

தற்பொழுது உலகத்தையே ஆட்படுத்தி உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா காலத்திலும் நாம் துவண்டுவிடாது  எமக்கான நீதிவேண்டிய போராட்டத்தை mask ( மாஸ்க் போராட்டாக மாற்றியிருக்கின்றோம். தற்போதையஉள்ளிருப்புச் சட்டமும், வெளியே செல்பவர்கள் mask அணிந்து செல்லவேண்டும் என்ற நிலையில் எமது நியாயத்தையும், அதற்கான போராட்டத்தையும் அவர்களின் இல்லங்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில்  2020முள்ளிவாய்க்கால் மே 18 நாள் காலப்பகுதியில் சில பிரதேசங்களில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட (மாஸ்க்) mask  ஐ கூடவே எமது நியாயப்பாட்டினை வெளிப்படுத்தும் பிரெஞ்சு மொழியிலான துண்டுபிரசுரத்தையும் சேர்த்து வழங்கியிருந்தோம். 

இச்செயற்பாடானது  பிரெஞ்சு மக்களினது,பல்லினமக்களினதும், அரசியல் பிரமுகர்களினது பாராட்டுதலுக்கு வழிசமைத்துள்ளதும்குறிப்பிடத்தக்கது.)

• இதனூடாக  ஒரு உயிர் என்பதும், அதன் பாதுகாப்பும் எத்தனை முக்கியமானது.

• ஓவ்வொரு மனித உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும் அது சாதி, சமயம், நிறம், மதம், மொழியிற்கு அப்பால் சென்று மதிக்கப்பட வேண்டும்.

• நாட்டின் சட்ட திட்டங்களையும், மருத்துவ ஆலோசனைகளையும், தனிநபர் சுகாதாரத்தை சுயகட்டுப்பாட்டை பேணி, தமது அன்றாட கடமைகளையும் பயமின்றி மேற்கொள்ள வேண்டும்

• இது போன்ற நேரத்தில் ஈழத்தமிழ் மக்களின் மனிதநேயத்தையும், இவர்களைத்தான் பௌத்த மதவாதிகளின் துணையோடு பலலட்சம் மக்கள் சிறீலங்கா அரசால் கொன்றொழிக்கப்பட்டனர் என்பதை தெரிவிக்கும் முகமாகவும்.

• சர்வதேச மக்களின் மனங்களை நியாயமான ஈழத்தமிழர் போராட்டம் சென்றடையவும் ஒரு பரப்புரைச் செயற்பாடக அமைய வேண்டும் என்பதையே நாம் கருத்தில் மனதில் கொண்டிருந்தோம்.

இச்சிறிய விடயம் மிகப்பெரும் பயனை இன்று ஏற்படுத்தி வருகின்றது. இச்செயற்பாட்டினை எடுத்தியம்பிய போது பின்நிற்காது இதற்கு கரங்கொடுத்த உள்ளங்களை நாம் நன்றியோடு இந்நேரத்தில் இறுகப் பற்றிக்கொள்கின்றோம்

அன்பான பிரான்சுவாழ் தமிழீழ மக்களே!

 இக்கொரேனா கொடுரத்தில் எமது போராட்டம் முடங்கிப்போய்விடுமோ என்று நினைத்த வேளைகளில் இப்போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் கரங்களைப் நீங்கள் தான் பலப்படுத்தினீர்கள். மாவீரர்களின் உன்னத உயிர்க்கொடையாலும், மக்களின் உயிர் அர்ப்பணிப்பாலும், களத்தில் நின்ற போராளிகளாலும், தாய்நிலத்திலும், புலத்திலும் தமிழ்மக்கள் செய்த பொருண்மியப் பங்களிப்பாலும் தான்  நாம் வீழ்ந்து விடாது வீரியமாய் எழுந்து தான் நிற்கின்றோம்.

2020 மே 18 காலப்பகுதியில் முன்னெப்போதுமில்லாதது வகையில் எமதுபோராட்டத்தின் நியாயத்திற்கு பல வல்லரசு நாடுகளில் சிலர் குரல் கொடுத்துத்தான் இருக்கின்றார்கள். இது போராட்டத்தின் நியாயப்பாட்டிற்கு கிடைத்த மற்றொரு மைல் கல்லாகவே பார்க்கின்றோம்.

ஆனால் இவற்றுடன் நின்று விடப்போகின்றோமா.. ? அல்லது தொடர்ந்து வேகமாக ஒன்றாக நேர்த்தியாக ஒரே கொள்கையைத்தாங்கிப் பயணிக்கப்போகின்றோமா..? நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நாட்களும், காலங்களும் எமது மண் அங்குலம் அங்குலமாகப் பறிபோய்கொண்டு  இருக்கின்றது. போலிக்காரணங்கள் சொல்லி மக்களுக்காக உழைத்த மனிதநேயப்பணியாளர்கள் கைது செய்து சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

காணமல் போனோரின் பெற்றோர்களின் 2வருடங்கள் கடந்த போராட்டம் நீறு பூத்த நெருப்பாக கணன்றுகொண்டேயிருக்கின்றது. இவற்றை நாம் சர்வதேசத்தின் கண்களுக்கும், காதுகளுக்கும் தொடர்ந்தும் எடுத்துச்செல்ல வேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.

 2020அதற்காக நாம் இன்று எடுத்துக்கொண்ட கருவிதான் இந்த mask (மாஸ்க்) போராட்டமாகும். இதுவோர் சிறிய செயற்பாடாக இருந்தாலும் mask மாஸ்க்குடன் எமது துண்டுப்பிரசுரம் ஒவ்வொரு பிரெஞ்சு மக்கள் வீடுகளுக்குள் அவர்களுடைய கைப்பைவரை செல்வதை காண்கின்றோம்.

இவற்றைப் பெற்றுக்கொண்ட மக்கள் எம்மால் கொடுக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தை நிச்சயம் வாசிக்காமலோ, மற்றவர்களுடன் இதைச்சொல்லாமலோ விடமாட்டார்கள் என்பதும் எல்லோரது மிகுந்த நம்பிக்கையாகும். “ஒரு முறைதான் விதைக்கப்போகின்றோம் பலகாலத்திற்கான அறுவடையை செய்ய ஏதுவாக இருப்போம்.’’

இந்த மனிதநேயப்பணியில் அனைத்துல மனிதஉரிமைகள் சங்கமாகிய நாம் எதிர்வரும் யூன் மாதம் 15 06 2020 நடைபெறவுள்ள ஜெனீவா ஜநாடுகள் சபையின் 44 ஆவது கூட்டத்தொடர்காலத்தில் இந்த mask (மாஸ்க் ) போராட்டத்தை முன்னெடுக்கவும் அதற்கான அனுமதியையும் நாம் பெற்றுள்ளோம். ஆனால் ஆயிரக்கணக்கான மாஸ்க்குகள் எமக்குக்கிடைக்குமாயின் இது பெரிய அளவிலே மனிதநேய ரீதியாவும், அரசியல் ரீதியாகவும் எமக்கு பெரும் ஆதரவையும், பலத்தையும் பெற்றுத்தரும் என்பதில் எள்ளளவும் ஜயமில்லை என்பதையே கடந்த மே 18 ல் நாம் இப் போராட்டத்தைச் மேற்கொண்ட போது அதன் பலாபலன்கள் எமக்கு உணர்த்தியிருந்தன.

இந்த mask மாஸ்க் போராட்டத்தை தெரிவித்தபோது தாமாக முன் வந்து சிலர் உதவிவருகின்றனர். தற்பொழுது பெருந்தொகையான மாஸ்க்குகளை நாம் பெறுவதற்கு மிகுந்த பொருண்மிய சிக்கலை எதிர் நோக்கி நிற்கின்றோம் என்பதே உண்மையாகும். கடந்து வந்த பாதையில் எமது நிழற்பட கண்காட்சி சிங்கள தேசத்தை எவ்வாறு ஆட்டங்காண வைத்தது என்பதை இறுதியாக நடைபெற்ற நிழற்படக்கண்காட்சி காலத்தில் ஜெனிவா முருகதாசு திடலில் சிங்கள இராணுவத்தினர் துணிகரமாக மேற்கொண்ட நடிவடிக்கையைசாட்சியம்.

 எனவே இந்த mask (மாஸ்க் போராட்டமும்) சிங்களத்திற்கு இன்னும் பெரும் சவாலாகவே  அமையும் என்பது திண்ணம்.

  அன்பான தமிழீழ மக்களே ! இதில் நம்பிக்கை வைத்து நாம் mask மாஸ்க் பெற்றுக்கொள்வதற்கான பொருண்மிய உதவியை செய்யுமாறு அன்புரிமையுடன் கேட்டுநிற்கின்றோம். அத்துடன் இக்காலப்பகுதியில்  மூன்று வாரங்கள் தொடர்ந்து இப்பரப்புரையை செய்ய வேண்டியுள்ளதால் இது கொரோனா நோய்த்தொற்று என்பதாலும் கடந்த காலங்கள் போன்று எமது நண்பர்கள், உறவுகள் இல்லங்களில் இரவு மட்டும் தங்கி நின்று பணியாற்ற முடியாத நிலையில் தனியார் தங்குமிடங்களில் நின்றே இப்பணியாற்ற வேண்டியிருப்பதும், போக்குவரத்து செலவு, வீதிவரி, எரிபொருள், வாகனவரி, சாரதி இல்லமை போன்ற பல்வேறு  சிக்கல்களை  எதிர் கொண்டே இப்பலன்மிக்க போராட்டத்தைச் செய்ய வேண்டியுள்ளது என்பதையும் தங்களுக்கு அறியதருவதுடன் எமக்கு உதவிட எம்மினமே உன் கைதான் உள்ளது அதை செய்வாயாக – நன்றி

அனைத்துலக மனித உரிமைகள் சங்கம் – பிரான்சு

மேலதிகத் தொடர்புகளுக்கு 0033145988949 ..00 33 75 80 87 084