இராசநாயகம் உதயமாலா அவர்கள் 05.06.2020 அன்று சாவடைந்துள்ளார்

681

தமிழ்ச்சோலை ஆசிரியர் நந்தியார்
(nanterre),
கொலம்பஸ்(colombes),
சேர்ஜி cergi pontuvas)
இராசநாயகம் உதயமாலா அவர்கள் 05.06.2020 அன்று சாவடைந்துள்ளார்


தேசவிடுதலைப்பற்றுக் கொண்டவர், பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பில் உறுப்பினராகவும், பணியாற்றியவர். ஓர் சிறந்த குரல் வளம்கொண்டவர் எமது தேசிய விளையாட்டுப்போடடிகளில் , தேசநிகழ்வுகளில் அறிவிப்பாளராகவும் கடமையாற்றியவர். தமது வாரிசுகளையும் அதன்பால் இணையவைத்து பங்கொள்ளச்செய்தவர். சிறந்த கலைஞரும் கூட.

எல்லோரோடு அன்பாகவும், அறிவுரை கூறுபவராகவும் தான் நாம் பார்த்திருக்கின்றோம்.நாடகம், கதை எழுதுவதிலும், பிள்ளைகளுக்கு கொண்டு சேர்ப்பதிலும் ஆற்றல் கொண்டவர் தமிழர் வரலாறு பாரம்பரியம் அழிந்து போய்விடக்கூடாது என்று அதன் தேடல்களைத்தேடியவர். மனிதநேயமிக்கவர் ( இறுதியாக நடைபெற்ற தமிழ்ச்சோலை விளையாட்டுப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட முதலுதவியாளர் குறித்த நேரத்திற்கு சமூகமளிக்கவில்லை பொறுப்பாக இருந்தவர் மிகுந்த பதட்டத்துடன் போட்டிகள் ஆரம்பிக்கப்படப்போகின்றதே என்ன செய்ய என்று குழம்பி தொலைபேசித்தொடர்புகளை மேற்கொண்டபோது உதயா வந்து கொஞ்சம் பொறுங்கோ என்று கூறிவிட்டு ஓடிச்சென்றவர் 10 நிமிடங்களில் ஒரு முதலுதவிப்பெட்டியோடு ஓடி வந்து

அதைக்கொடுத்திருந்தார் தனது வாகனத்தில்எப்போது இது இருக்கும் அண்ணர் என்றபோது அதன் காத்திரம் அன்று தெரியவில்லை இன்று அந்த மருத்துவமே அவரை சாகவிட்டுவிட்டதே என்று வேதனையாகவுள்ளது. தன்னைப்போலவே பிள்ளைகள் துணைவரைக் கொண்டவர். இவர் வாழும் போது இவரின் பிரிவு இப்படியாக நிகழும் என்று எதிர்பார்க்கவில்லை . இவரோடு பழகியவர்கள் பலர் இவரின் கதைகளை சொல்லும் போது இந்த காலம் ஏன் இப்படியானவர்களை எடுத்துக்கொள்கின்றது.
அன்பான தங்கையே பிறந்தவன் தான் இறக்கும் வரை என்ன செய்தான் என்பதே இன்று எழும் கேள்வி அந்தப்பணியை உங்கள் உடல் உபாதையையும் காட்டிக்கொள்ளாது கடமையாற்றினாய் நீர் தமிழ்ச்சோலை ஆசிரியராய் இருந்து பல மாணவர்களை உருவாக்கினாய் , வழிநடத்தினாய் வரும் நாளில் அவர்கள் உங்கள் கனவை எண்ணத்தை ஈடேற்றுவார்கள். உங்கள் பிரிவு தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும்பெரும் இழப்பே!


உங்கள் இழப்பால் துயருற்று இருக்கும் துணைவர், பிள்ளைகள், உற்றார் உறவினர் நண்பர்கள் சக ஆசிரியர்கள் மற்றும் அனைவருடனும் எமது துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம்