சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறாது – பொலிஸ்

239

பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவை ஊழியர்களும் பயணிகளும், அதிகாரிகள் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்களா என்பதை அவதானிக்க சிறப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) தனியார் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றது.

இந்நிலையில் பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார்களா என்பதை சோதிக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனைத்  தெரிவித்துள்ளார்.

பொலிஸார் சாதாரண நடவடிக்கையில் ஈடுபடுப்பார்கள் என்றும் ஆனால் முகக்கவசம் அணிவது போன்ற சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை அவதானிப்பது குறித்து கவனம் செலுத்தப்படாது என அவர் கூறியுள்ளார்.0Shares