தேர்தல் திகதி அறிவிப்பு:இன்று நிச்சயமில்லை!

274

தேர்தல் திகதி தொடர்பில் இன்று அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்ற போதும் அது நிச்சயமல்லவென தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக, தேர்தல் ஆணைக்குழு இன்று(08) கூடவுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில், தேர்தல் திகதி குறித்த இறுதி தீர்மானம் வெளியாகலாமென எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் நேற்றைய தேர்தல் வாக்களிப்பு ஒத்திகையின் போது நிச்சயமாக இன்று தேர்தல் திகதி பற்றி அறிவிக்கமுடியுமாவென நம்பவில்லையென மகிந்த தேசப்பிரிய கருத்து வெளியிட்டுள்ளார்.