அதிகாலை நடந்த விபத்து. வவுனியாவில் சம்பவம்

1742

அதிகாலை நடந்த விபத்து. வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
நுவரெலியாவில் இருந்து யாழ் சாவகச்சேரி நோக்கி பயணித்த கார் அதிகாலை 1 மணியளவில் வவுனியா தேக்கவத்தை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, வீதிகரையில் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் காரை ஓட்டிய நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் ஓட்டிவந்த கார் கடுமையான சேதங்களிற்குள்ளாகியது.
விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.