டக்ளஸின் வருகைக்காக கடும் பாதுகாப்பு.

357

டக்ளஸின் வருகைக்காக கடும் பாதுகாப்பு.
வவுனியா 
கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வவுனியாவிற்கு இன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இவ் விஜத்தினை முன்னிட்டு விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரினால் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இச்சந்திப்பு இடம்பெற்ற மண்டபம்  மற்றும் அதனை சூழ்ந்த பிரதேசங்களில் மோப்பநாய் மூலம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், இச்சந்திப்பிற்கு வந்த பொதுமக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


இதேவேளை ஊடகவியலாளர்களின் பொருட்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது.