யாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்

843

யாழ்.மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தின நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றன.

சர்வதேச சுற்றாடல் தினம் ஜூன் 5ஆம் திகதி நினைவு கூரப்படுகின்றது. அன்றையதினம் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக குறித்த தினத்தில் சுற்றுச்சூழல் தினத்தை நடத்த முடியாமல் போனதாக யாழ்.மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்றைய தினம், சுற்றாடல் தின நிகழ்வுகள்  நடத்தப்பட்டதாக யாழ்.மாவட்ட செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அவரால் மரம் நாட்டி வைக்கப்பட்டதோடு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் சிறப்புரையும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.