தமிழர் தாயகத்துக்கான நீதிக்கான பயணத்தின் காலப்பணி

537

தமிழர் தாயகத்துக்கான நீதிக்கான பயணத்தின் காலப்பணி

தமிழர் தாயகம் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கு உள்ளாகி பதினொரு ஆண்டுகள் கடக்கும் நிலையில் தமிழர்களின் ஒரே ஒரு பிடிமானமாகவும் நம்பிக்கையாகவும் இருக்கின்ற ஜெனிவா மனித உரிமை பேரவை அதன் ஊடாக ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட தாயகம் நோக்கிய பயணத்தின் செயற்பாட்டு வெளியில் 2021ம் ஆண்டும் முக்கியமான ஆண்டாகவே அமைகின்றது.ஈழத்தமிழர்களின் மீது சிங்கள பேரினவாதம் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியுள்ள தமிழின அடையாள அழிப்பு இனப்படுகொலை கடந்த பதினொரு வருடங்களில் சர்வதேச அரங்கில் நுழைந்து சர்வதேச வல்லரசுகளும் அறிந்த விடயமாக மாறியுள்ளது.

அதற்கு காரணம் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் சிந்திய இரத்தமும் அர்ப்பணிப்புமே இன்றைக்கு இனப்படுகொலைக்கான நீதி கோருதலை தமிழர்களின் நீண்ட விடுதலைக்கு தாகத்துக்கு தீர்வு ஒரு பொமுறையாக கையிலெடுத்து தாயகத்திலும் புலத்திலும் தமிழர் சமுகம் தொடர்ந்து போராடுகின்றது.எனினும் பின்னடைவுகளும் இல்லாமல் இல்லை.

ஒரு புறத்தில் சிங்கள பேரினவாதம் ஜெனிவா மனித பேரவை அரங்குவரை வந்து தமிழர்கள் மீதான தனது அடக்கு முறையை ராஜதந்திரத்தின் மூலம் நடத்த முயலும் அதே வேளை புலம்பெயர் தமிழர்களை பல்வேறு சூழ்ச்சிப்பொறிமுறைகளை கையாண்டு உதிரிகளாக ஆக்கி ஒன்றுதிரண்டு சர்தேசத்தில் புலம் தமிழ்ச்சமுகத்தின் பலத்தை காட்டதாத வகையில் தனது வெளியுறவு செயலகங்கள் முகவர்கள் மூலம் கடுமையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது.

அதே வேளை தாயகத்திலும் தமிழர் தலைமைகளை ஜெனிவா விடயத்தில் ஒருமித்த தீர்மானத்தை மேற்கொள்ளாத வகையில் அபிவிருத்தி மற்றும் பாராளுமன்ற வரப்பிரசாத மாயைகளுக்குள் சிக்கவைத்து பலவீனப்படுத்தி ஜெனிவாவுக்கு தங்கள் முகவர்களாக தமிழர்த்தலைமைகளையே ஆயுதமாக்கிவரும் துரதிஸ்டவசமான சூழலும் தொடர்கின்றது.

சர்வதே விசாரணையே தேவையென்றும் போக்குற்றவாளிகளை இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்று ஆரம்பத்தில் உணர்ச்சி உத்வேகத்துடன் இருந்த புலத்திலும் நிலத்திலும் இருந்து தமிழர் தரப்பின் நிலைப்பாட்டில் உள்ளக விசாரணை உள்நாட்டு பொறிமுறை என்ற இன்னொரு இறங்கு நிலை ஏற்ப்பட்டதையும் அதனால் 2015ல் இருந்து தற்பொழுது 2021 வரை ஒரு நீதிக்கான தாமதத்தையும் பின்னடைவையும் தமிழ் மக்கள் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பூகோள ரீதியில் இலங்கை அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாடுகளால் தமிழருக்கு பழம் நழுவிப்பாலில் விழுந்த கதையாக சில சாதகமான வாசல்கள் வழிகள் ஒளிக்கீற்றுக்கள் தெரிந்துபோதும் தமிழர் தரப்பில் தொடர்ந்து காணப்படும் பலமற்ற ஒற்றுமையீனம் தலைமைகளின் பலவீனம் சர்வேதேச சாதகங்களை இலங்கை இனப்படுகொலை அரசாங்கத்திற்கு பாதமாக மாற்றுவதில் தோல்விகளே காணப்படுகின்றன.

நாய்கள் குரைத்துக்கொண்டிருக்கும் குதிரைகள் ஓடிக்கொண்டிருக்கும் என்பதுபோல சிலவேளை முள்ளிவாய்க்காலுக்கான இனப்படுகொலை நீதி விடயத்தில் தமிழர்கள் ஓய்ந்தாலும் விதைத்தவன் தூங்கினாலும் விதை தூங்காது என்பதான தமிழர் தாயகத்தின் விடயம் சர்தேச வல்லாண்மைகளுக்கு தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டது.எனவேதான் இந்த தருணம் என்பது விடுதலை தேடும் நீதி தேடும் தமிழீழ மக்களுக்கு மிகவும் வாய்ப்பான வழிகளை திறந்து காத்திருக்கிறது.இந்த நிலையில் தமிழ் மக்கள் அந்த வாசலால் தனித்தனியே போவதா அல்லது ஒன்றுதிரண்டு சக்தியாக போவதா என்ற வேள்விக்கு முடிவு தேடவேண்டிய எல்லை வந்தவிட்டது.

தமிழர்களுக்கு இடையில் உள்ள பல்வேறு கசப்புணர்வுகளை தூக்கி ஒரு மூலையில் போட்டுவிட்டு ஒரு இலட்சியத்துக்காக கைகோர்ப்பது காலத்தின் கடமை.

இலங்கையில் இப்போது இனப்படுகொலையாளிகளான ராஜபக்சக்கள் அரசாங்கமும் இதில் இனப்படுகொலைக்குற்றவாளிகளான படையினரும் பதவிகளில் அமர்ந்துள்ளனர்.இதனாலும் இலங்கையின் வெளியுறவு கொள்கை நிலைபாடுகள் காரணமாகவும் அண்டையில் உள்ள இந்தியாக மற்றும் மேற்குலகம் இலங்கை மீது தீவிரமான பார்வை கொண்டிருப்பதுடன் அத்தருணத்தின் தமிழர் தரப்பையும் அரவணைக்க முயல்கின்றது.

இவ்வேளையில் இனப்படுகொலை இலங்கை அரசாங்கமும் சும்மா இருக்கப்போவதில்லை.தமதுக்கு எதிராக பாயவுள்ள அம்புகளை திசைதிருப்ப திட்டங்களை தீட்டிவருகின்றது.அதற்காக மீணடும் தமிழர் தரப்பு பிரதிநிதிகளை பயன்படுத்த தயங்காது எனவேதான் பலமான ஒரு நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழ்ச்சமுகம் எடுக்கவேண்டியுள்ளது.அதிலும் வருகின்ற 2021 மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள மனித உரிமைப்பேரவை கூட்டத்தில் தமிழர்களின் நீதிகோரும் பயணம் ஒரு திருப்புமுனையை அடைய போராட்டங்களையும் ராஜதந்திரத்தையும் மேற்கொள்ளவேண்டியுள்ளது.

இப்போது இலங்கை அரசாங்கத்திற்கு எரிச்சலாகவும் சிக்கலாகவும் உள்ள தரப்பு புலம்பெயர் சமுகமே.புலம்பெயர் நாடுகளில் செய்யப்படும் நினைவேந்தல்கள்.போராட்டங்கள் என்பன இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுப்பனவாக உள்ளன.தாயகத்தில் மாவீரர் நாடளையும் நினைவேந்தல்களையும் பயங்கரவாத சட்டத்தின் மூலம்ஒடுக்கி சிங்கள ராஜபக்ச அரசாங்கம் தென்னிலங்கையில் புலிகளை கட்டுப்படுத்துவதாக ஒடுக்குவாக தாயககோட்பாட்டை அழிப்பதாக தோற்றத்தை ஏற்படுத்தினாலும் புலம் நாட்டில் கார்த்திகை பூவும் புலிக்கொடியும் இனப்படுகொலையாளிகளின் முகங்கள் அநீதிகள் அக்கிரமங்கள் அடங்கிய பதாகைகளும் கோசங்களும் ராஜபக்சக்களின் தூக்கத்தை கெடுக்கின்றன.அதனால்தான் சரத்வீரசேகர என்ற இனவாதி அமைச்சராக்கப்பட்டும் இருக்கிறார்.அவர்

சர்வதேசத்தோடு சேர்ந்து புலம்பெயர் புலிகளை போராட்டங்களை ஒடுக்கப்போவதாக பேசுகிறார்.இந்த நிலையில்தான் கடந்த பதினொரு ஆண்டுகளாக தொடர்ந்து புலம்பெயர் நிலத்தில் தமிழர்களின் போராட்டம் எத்தகைய வலிமை வாய்ந்தது என்பதை உணரவும் முடிகின்றது.ஆனால் போராட்டம் முடியவில்லை.

அனைத்துலக மனித உரிமைச் சங்கமாகிய நாமும் கடந்த பதினொரு ஆண்டுகளாக ஜெனிவா முன்றலில் தமிழர்களுக்கு இலங்கையில் சிங்களப்பேரினவாதிகளால் இழைக்கப்பட்ட அநீதிகளை காட்சிப்படுத்தி சர்வதேச சமுகத்துக்கு உரைத்து போராடிவருகின்றோம்.ஆனாலும் அது தனி மனித போராட்டமாகவே தொடர்கின்றது.குறிப்பிட்ட தாயக்கப்பற்றாளர்களுடன் பங்குபற்றுதல் நிதிப்பங்களிப்பு ஒத்தாசைகளுடன் ஒத்துழைப்புடனேயே நடந்து வருகின்றது.ஜெனிவா நோக்கிய நடைப்பயணங்களை மேற்கொண்டும் நாடுகளின் பல்வேறு நகரங்களில் இனப்படுகொலை சாட்சியங்களை காட்சிப்படுத்தி எம்மால் முடிந்தவரையில் இடையறாது தமிழர் நீதிக்காகவும் தமிழர் தாயக விடுதலைக்காகவும் போராடிவருகின்றோம்.

ராஜபக்சக்கள் இனப்படுகொலை அரசாங்கம் இலங்கையில் உள்ள நிலையில் 2021ம் ஆண்டு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தனது போராட்டத்தை ஜெனிவாவிலும் அதை கடந்தும் உகந்த வழிமுறைகள் மூலம் விரிவாக்க நினைப்பதுடன் பலரையும் இணைத் து பலமிக்க போராட்ட பயணமாக்க எண்ணுகின்றோம்.எனினும் அதற்கு நிதி அனுசரணை ஒத்தசை உதவி என்பது இன்றிமையாதது.அதை உரிமையோடு புலம்பெயர் தமிழ் மக்களிடம் கேட்பதும் எமது கடமையாகின்றது.புலம்பெயர் தமிழ் மக்களாகிய உங்களின் சிறுதுளி பங்களிப்பு தமிழின விடுதலை வரலாற்றுக்கு பெரும் சாதனைகளுக்கு வெற்றிகளுக்கும் அத்திபாரக்கற்ளானது 2009க்கு முற்பட்ட போற்றத்தக்க வரலாறு.

ஏன் அதற்கு பின்பும் போரினால் நலிந்து தாயக மக்களை கைதூக்கி விட கண்ணீரை துடைக்க இன்றுவரை தொடர்ந்து ஆற்றிவரும் பொருளாதார உதவிகள் மேன்மையானவை.ஆனாலும் எமது மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான நிலத்துக்கான அதில் நீதிக்கான போராட்டம் இன்னமும் ஓயவில்லை.

அதுதனது  இலக்கை அடையும் வரை புலம்பெயர் மக்கள் ஒவ்வொருவரும் போராட்டங்களுக்கு பங்களிப்பை நல்குவது தாயகத்துக்கான பெருங்கடமை.அந்த வகையில் அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ள போராட்டஙகளில் புலம்பெயர்  மக்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற நிதி ஒத்தசை வழங்குகின்றவர்களாவும் மாறி தமிழர் நீதியை விரைந்து பெற கைகொடுக்க வேண்டுமென அன்புடனும் உரிமையுடனும் வேண்டிநிற்கின்றோம்.

அனைத்துலக மனித உரிமை சங்கம் ==00 33 75 80 87 08 4