கரம் கோர்த்து பலம் சேர்த்து பயணிப்போம்

கரம் கோர்த்து பலம் சேர்த்து பயணிப்போம்

இலங்கையில் தமிழர் தாயகத்தில் கடந்த எழுபத்தி மூன்று ஆண்டுகளாக தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கச்செய்யப்பட்டு அதன் உச்சகட்ட கொடுரமாக முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடத்தப்பட்டது.

அதன் பிறகு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச நீதி கோரி நிலத்திலும் புலத்திலும் போராடி வந்த நிலையில் ஐநா மனித உரிமை பேரவை இந்த ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான அறிக்கை வெளியிடும் நிலையில் தமிழருக்கு இறுதி நீதி கிட்டும் வரையிலும் தமிழர்களுக்கு தமிழர் தாயகத்தில் சுதந்திரமான வாழ்வு கிடைக்கும் வரையிலும் நாம் எல்லோரும் அறவழியில் சர்வதேச நாடுகளின் மூலை முடுக்கெங்கும் தமிழர்களுக்கு நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க ஆதரவை திரட்டவேண்டிய நிலையிருக்கிறது.


அனைத்துலக மனித உரிமை சங்கத்தினராகிய நாம் கடந்த எட்டு ஆண்டுக்கு மேலாக ஐநா மனித உரிமை பேரவை முன்றலில் இனப்படுகொலை சாட்சியமான நிழற்படங்களை வைத்து நீதி கோரி போராடி வருகிறோம்.எனினும் அந்த போராட்டம் புலம் பெயர் உறவுகள் தமிழுணர்வாளர்களாகிய உங்கள் பங்களிப்பு துணையுடன் ஐரோப்பிய நாடுகள் எங்கும்  ஈழத்தமிழருக்காக உங்கள் இதயத்தை திறவுங்கள் என்ற கோசத்துடன் விரிபுபடுத்த வேண்டியுள்ளது.

அதை தனிமனிதனாகவோ அல்லது தனியோருமைப்பாகவோ நின்று செய்யமுடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள் ஆகவே எல்லோரும் கைகோர்த்து இப்போராட்டத்தை வெற்றிப்போராட்டமாக மாற்ற நீங்களும் பங்கெடுத்து பொறுப்புக்களையேற்று பயணிக்கவருமாறு வேண்டுகிறோம்.பூர்வீகமாக இலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் உரிமைகளை பறித்தெடுக்க சிங்கள பேரினவாதத்திற்கு வசதியாக பிரித்தானிய காலனித்துவத்தில் இலங்கை விடுப்பட்ட சுதந்திர நாளாக சிங்கள பேரினவாதம் கொண்டாடும் பெப்ரவரி நான்காம் நாளான தமிழர்களின் கரி நாளில் பிரான்ஸ் பாராளுமன்ற முன்றலில் நீதிக்கான போராட்டம் தொடங்கி ஈழத்தமிழர்களுக்காக உங்கள் இதயத்தை திறவுங்கள் என்ற கோசத்துடன் எமது பயணத்தை ஐரோப்பிய நாடெங்கும் ஆரம்பிக்க இருக்கிறோம்.எனவே இந்த நீதிக்கான போராட்டத்திற்கு பல மொழிகள் தெரிந்த இளைஞர்களையும் யுவதிகளையும் அழைக்கின்றோம். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் அனைத்து இயக்கங்களும் மற்றும் தமிழக மக்களின் ஆதரவையும் உங்கள் பங்களிப்பையும் நாடி நிற்கின்றோம்.


புலம்பெயர் நாட்டில் நீதிக்காக குரல் கொடுக்கும் அனைத்து அமைப்புக்களையும் மற்றும் தமிழினத்தின் விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களையும் நீதிக்கான பயணத்திற்கு ஆதரவுக் கரங்களை வழங்கி பங்களிக்குமாறு  அன்பு உரிமையோடு உங்களை அழைக்கிறோம்.

 தாயகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் . இயக்கங்களையும் மற்றும் மாணவச் செல்வங்களையும் மேலும் சிவில் அமைப்புக்களையும் மற்றும் விடுதலக்கு குரல் கொடுக்கும் அனைவரையும் இந்த போராட்டத்தோடு இணைந்து பயணிக்க 
 உங்கள் அனைவரையும் கரம் கோர்த்து பலம் சேர்த்து பயணிக்க உரிமையுடன் அழைப்பு விடுக்கிறோம்.


அனைத்துலக மனித உரிமை சங்கம