செட்டிகுளத்தில் இளைஞர் யுவதிகள் தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

86

கிராம மட்டத்தில் இருக்கும் இளைஞர் யுவதிகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் செட்டிகுளத்தில் ஆரம்பம்

(13/02/2021) செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் வவுனியா,செட்டிகுளம் இளைஞர் சேவை அதிகாரி இராமலிங்கம் சசிகரனின் ஏற்பாட்டில் செட்டிகுளம் பிரதேச சம்மேளன தலைவர் திவக்சன் தலைமையில் இடம் பெற்றது.


பிரதேச இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், இளைஞர்கழகங்களின் அபிவிருத்தி, சமூக வேலைத்திட்டங்கள் மற்றும் இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக செட்டிகுளம் பிரதேச சம்மேளனத்தை பிரதிநிதிதத்துவப்படுத்துகின்ற இளைஞர் யுவதிகளோடு இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும் இவ் நிகழ்வில் வவுனியா மாவட்ட சம்மேளனத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன், வவுனியா மாவட்ட தேசிய சம்மேளன பிரதிநிதி கணேஷ் நவநீதன், வவுனியா மாவட்ட சம்மேளன அமைப்பாளரும் முன்னாள் மாவட்ட சம்மேளன தலைவருமான காமராஜ் கிரிதரன்  ஆகியோர் கலந்து  சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.