யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தொழில் வழிகாட்டல் நிகழ்வு.

90

யுரேனஸ் இளைஞர் கழகத்தின்  தொழில் வழிகாட்டல் நிகழ்வு.

வவுனியா மாவட்ட மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் மூலம் தொழில் தேடும் இளைஞர் யுவதிகளுடனான கலந்துரையாடல் இன்று யுரேனஸ் இளைஞர் கழக காரியாலயத்தில் யுரேனஸ் இளைஞர் கழகத்தின் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவின் உபசெயலாளர்   ஜெகநாதன் பிருந்தா தலைமையில் இடம்பெற்றது

இளைஞர்கள் தொழில்தேடும் போது எதிர்நோக்கின்ற பிரச்சினைகள், மேலதிக தகமைகள், தொழில் கல்வி நடவடிக்கைகள், தொழில் வழங்குனர்கள் மற்றும் தொழில் வாய்ப்பு நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. 


இவ் நிகழ்வில் வவுனியா மாவட்ட சம்மேளனத்தின் தலைவரும் யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவருமான கணேசலிங்கம் சிம்சுபன், வவுனியா மாவட்ட செயலகத்தின் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் S.சுரேஷ்குமார் மற்றும் மனிதவலு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான J.மயூரசர்மா ,C.ராஜேஸ்வரன் மற்றும் V. இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.