Villejuif நகரசபை முன்றலில் நடை பெற்ற கவனயீர்ப்பு மற்றும் இனப்படுகொலை நிழற்பட ஆதார காட்சிப்படுத்தல்.

100

Villejuif நகரசபை முன்றலில் நடை பெற்ற கவனயீர்ப்பு மற்றும் இனப்படுகொலை நிழற்பட ஆதார காட்சிப்படுத்தல்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும். அதற்கான முன்நகர்வையும் ஆதரவையும் பிரான்சு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

பிரான்சு நாட்டில் உள்ள நகரசபைகள் பிரான்சு அரசிடம் இதை வலியுறத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் இனப்படுகொலைக்கான நிழற்பட காட்சிப்படுதலும் பாரிஸ் நகரிலும் அதனை அண்மித்த நகரங்களிலும் நடைபெற்று வருக்கின்றது. நேற்று16.02.2021 10h00 மணி முதல் 17h00 மணிவரை Villejuif நகரசபை முன்றலில் குறித்த கவனயீர்பு நடைபெற்றது. இந்த கவனயீர்ப்பின் போது Villejuif நகரசபையின் உறுபினர் கலந்து கொண்டார் அவருடன் சந்திப்பு இடம்பெற்று எமது கோரிக்கையடங்கிய மனுவும் வழங்கப்பட்டது.